Advertisement

பெரும்பாலான இளைஞர்கள் மேட்ரிமோனிகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? அதையும் தாண்டி ஏமாற்றுவதற்காக!!

பெரும்பாலான இளைஞர்கள் மேட்ரிமோனிகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? திருமணத்திற்கா, காதலுக்கா, பொழுதுபோக்கிற்கா இல்லை டின்டேர் ஆப் போல பயன்படுத்துகிறார்களா?

அதையும் தாண்டி ஏமாற்றுவதற்காக!!

ஒரு தம்பி மேட்ரிமோனியில் வரனுக்காக பதிவு செய்து காத்திருந்தார். தம்பி சாப்ட்வேர் என்ஜினீரா ஒரு கம்பெனில வேலை பண்ணிட்டு இருக்காரு.

அவருக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு பொண்ணு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புறாங்க. இவருக்கும் அந்த பெண்ணை பிடித்து போக ரெண்டு பேரும் சேர்ந்து சேட் பண்ண ஆரம்பிச்சாங்க. அவங்களோட பழக்கம் முத்தி காதலாகி, காதல் முத்தி கல்யாணம் பேச்சை தொட்டது.

இரண்டு பேரும் ஒரே லவ்வாகி... கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருக்க அந்தப் பெண் சென்னை வருவதாய் ஒருநாள் முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பாஷனைகள் எல்லாமே வாட்ஸப் சாட் மற்றும் வாட்ஸப் கால் மட்டும் தான் நடந்துள்ளது. ஏன் இதை அடிக்கோடிட்டு சொல்கிறேன் என்றால் கதையின் ட்விஸ்டு இதில்தான் உள்ளது.

மறுவாரத்தில் அந்தப்பெண் நம்ம தம்பியை தொடர்புகொண்டு அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை என்றோ அப்பாவின் சிகிச்சைக்கு காசு தேவைபடுவதாக என்று அப்பாவின் சிகிச்சைக்காக அவள் அவனிடம் காசு கேட்பார் என்று நீங்கள் யூகித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் ட்விஸ்டு இது இல்லை.

அப்படிக் கேட்டால் அவன் உஷாராகி விட மாட்டானா, அதனால் அவள் அப்படி கேட்கவில்லை மாறாக தன் வைத்திருந்த எல்லா பணத்தை அப்பாவிற்கு அனுப்பி விட்டதாக கூறினாள். மற்றும் தன்னிடம் காசு இல்லாத காரணத்தினால் சம்பளம் வந்தவுடன் டிக்கெட் போட்டு ஊருக்கு வருவதாக அவனிடம் கூறினாள்.

உடனே நம்ம தர்மப்பிரபு நான் வேண்டுமென்றால் டிக்கெட் போடவா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவள் வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்று கறாராக கூறினாள். மேலும் நான் யாரிடம் கடன் வாங்கும் பழக்கம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

உடனே நம்ம தம்பி...நமக்குள்ள அப்படி என்ன கணக்கு பாக்குற என்று கோபித்துக் கொண்டார். நீண்ட சமாதானத்துக்குப் பிறகு அவள் சம்மதித்திருக்கிறார்.

நான் வரேன் ஆனால் சம்பளம் வந்த பிறகு இந்த காசை நான் திருப்பித் தருவேன் அதனை வாங்கிக் கொள்வதாக உறுதி அளித்தால் மட்டுமே நான் உன்னிடம் பணம் வாங்கிக் கொள்வேன் என்று அடம் பிடித்திருக்கிறார்.

இறுதியாக நம்ம தம்பி பணம் தருவதாக உறுதி செய்தவுடன், அவள் இங்கே எனக்கு ஒரு நம்ம ஊர் அண்ணன் இருக்கிறார் அவரிடம் தான் எப்பவும் நான் டிக்கெட் புக் செய்வேன். அதனால் அவரிடம் நீ பணத்தை போட்டு விடு என்றாள்.

மேலும் நான் எப்போதும் பிசினஸ் கிளாஸ் தான் பிரயாணம் செய்வேன் என்றார். அதனால் எப்படியும் ஒன்றரை லட்சம் ஆகும்.

நம்ம தம்பியும் அந்த அண்ணனுக்கு பணத்தை அனுப்பி விட்டார்.

மேலும் கூறுகையில்.. உன்னுடைய அக்கவுண்ட் நம்பரை எனக்கு அனுப்பி விடு நான் ரெஜிஸ்டர் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தார்.

நம்ம தம்பியும் சொன்ன வாக்கை காப்பாற்ற அவள் கேட்டுக்கொண்ட அக்கொளன்டில் 1 லட்சம் 50 ஆயிரம் பணத்தை டிரான்ஸ்பர் பண்ணினான். அதற்கு பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து சேட் பண்ணினார்...ஆனால் எந்த பதிலும் அவருக்கு வரவில்லை.

அதற்கு பிறகு வாட்ஸப்பில் பதில் இல்லை அந்த நம்பரை தொடர்பு கொண்டாலும் கால் போகவே இல்லை. 

அந்த அக்கவுண்ட் நம்பரை துருவி பார்த்ததில் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நபருடைய அக்கௌன்ட் நம்பர் அது.

இந்த பிராடை கண்டுபிடிக்க பெரிய அறிவு தேவையில்லை. ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து பேச வைத்து தம்பியை நன்றாக ஏமாற்றி இருக்கிறார்கள்.

தம்பியிடம் இருந்த அந்த whatsapp உரையாடலில் பார்க்கும்போது.. அந்த தம்பி உரையாடிய நம்பர் அமெரிக்கா நம்பர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு புலப்படவில்லை அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண் இவ்வளவு நல்லா யோசிச்சு பிராடு பண்ண போறாளா என்று.

அப்புறம் அலசி ஆராய்ந்ததில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்னவென்றால். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இலவச போனில் பேசும் ஆப் இருக்கிறது. இதைத்தான் இந்த கும்பல் திருட்டுத்தனமாக உபயோகித்து ஏமாற்றி இருக்கிறார்கள்.  

அந்த ஆப்பின் பெயர் Text Now.... இதை போல் இருபதுக்கும் மேல் ஆப்ஸ் இருக்கு.


நீங்கள் உங்கள் நட்பு மற்றும் உறவினர்களுடன் பேச இந்த ஆப்பை நீங்க யூஸ் பண்ணலாமே. இது அமெரிக்கா மற்றும் கேனாடவிற்கு இலவசமாக பேச கண்டுபிடித்த ஆப்.