Advertisement

கீர்த்தியைத் தொடர்ந்து அனுஷ்கா, சமந்தா எடுத்த துணிச்சலான முடிவு!

Tamilcinema.news தென்னிந்தியத் திரையுலகில் கடந்த சில வருடங்களில் நாயகிகளை மையப்படுத்திய சில படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்றிரண்டு வெற்றியையும், சில தோல்வியையும் தழுவின. 

Anushka Samantha bold decision following keerthi



நாயகியரை மையப்படுத்திய கதைகளில் அதிகம் நடித்தவர் நயன்தாரா தான். அவரைத் தொடர்ந்து சமந்தா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், டாப்ஸி ஆகியோரும் அப்படி நடிக்க ஆரம்பித்தனர்.

Anushka Samantha bold decision following keerthi

ஆனால், கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த வருடம் ஓடிடியில் வெளியான தமிழ்ப் படமான 'பெண்குயின்', தெலுங்குப் படமான 'மிஸ் இந்தியா' ஆகியப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால், இனி அப்படியான படங்களில் நடிப்பதில்லை என கீர்த்தி முடிவெடுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது.


தற்போது அவரது வழியில் அனுஷ்கா, சமந்தா ஆகியோரும் அப்படியான படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டார்களாம். ஒரு தோல்வி வந்தாலும் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் அதனால் சில காலத்துக்கு அப்படி நடிக்க வேண்டாம் என தட்டிக்கழிக்கிறார்களாம்.