Advertisement

இந்த வயதிலும் அழகான உடையில் பூமிகா, இளம் நடிகைகளை தூக்கி சாப்பிட்ட புகைப்படம்!

2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. அதன் பிறகு ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்திருந்தார். தமிழை விட தெலுங்கில் அவர் மிகப் பிரபலமாக இருந்ததால் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த வயதிலும் அழகான உடையில் பூமிகா, இளம் நடிகைகளை தூக்கி சாப்பிட்ட புகைப்படம்!



பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் பூமிகா. அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து களவாடிய பொழுதுகள், யூ-டர்ன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.


அதுமட்டுமில்லாமல் தோனி படத்திலும் தோனிக்கு அக்காவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 42 வயதை எட்டியுள்ள பூமிகா சாவ்லா இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு மிகவும் இளமையாக கிளாமர் கலந்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அசரடித்துள்ளார்.


இந்த வயதிலும் அழகான உடையில் பூமிகா, இளம் நடிகைகளை தூக்கி சாப்பிட்ட புகைப்படம்!