Advertisement

தாய்ப்பால் தானம் செய்து அசத்திய தயாரிப்பாளர் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்

ஹிந்தியில் டாப்ஸி, பூமி பட்னேகர் நடித்த, 'சாந்த் கி ஆங்' என்ற படத்தை அனுராக் காஷ்யாப், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் நிதி பர்மர் ஹிராநந்தானி. கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு போக அதிகமாக சுரந்த தாய்ப்பாலை வீணாக்காமல் மருத்துவரின் ஆலோசனைப்படி தானம் கொடுத்துள்ளார். 


மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தாய்ப்பாலை தானம் வழங்கி உள்ளார். கொரோனா காலக்கட்டமான மார்ச் முதல் மே வரை சுமார் 42 லிட்டர் தாய்ப்பால் வழங்கி உள்ளார். தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிகமாகி வரும் நிலையில் இவரின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


ஹிந்தியில் டாப்ஸி, பூமி பட்னேகர் நடித்த, 'சாந்த் கி ஆங்' என்ற படத்தை அனுராக் காஷ்யாப், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் நிதி பர்மர் ஹிராநந்தானி. கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு போக அதிகமாக சுரந்த தாய்ப்பாலை வீணாக்காமல் மருத்துவரின் ஆலோசனைப்படி தானம் கொடுத்துள்ளார்.   மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தாய்ப்பாலை தானம் வழங்கி உள்ளார். கொரோனா காலக்கட்டமான மார்ச் முதல் மே வரை சுமார் 42 லிட்டர் தாய்ப்பால் வழங்கி உள்ளார். தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிகமாகி வரும் நிலையில் இவரின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.  தாய்ப்பால் தானம் செய்து அசத்திய தயாரிப்பாளர் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்