1990ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி சாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது. 2 வயதிலேயே நடிக்க வந்த ஷாமிலி 90களில் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். இவர் நடித்த துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2016ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகமானார். அதன் பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது தீபாவளி ஸ்பெஷல் என்பதால் பலரும் தங்களது புத்தாடையுடன் கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகின்றனர். உடலை இறுக்கிப் பிடிக்கும் வகையில் டைட்டாக சேலை கட்டி அழகில் குறைவில்லாமல் போஸ் கொடுத்திருக்கும் ஷாமிலியின் போட்டோஸ் லைக்குகளை அள்ளுகிறது.