Advertisement

பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

Benefits of Basil Thulasi

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

‘துளசி இலை நல்லது அதை சாப்பிட்டா சளிப் போயிடும்' என்பது மட்டும் தான் நமக்கு தெரியும், ஆனால் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள்.

நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.  சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.

காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது ஆனால், இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும் காய்ச்சல் என எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு.  

10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர்  நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.  

இருமலை இல்லாமல் செய்துவிடும்:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!


சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.  

நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் குறையும்:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

இன்றைக்கு முக்கிய நோய்களான  'நீரிழிவு' என்ற சர்க்கரை நோய்,  'பிளட் பிரசர்' என்ற இரத்த அழுத்தம். 

தினமும் 10 - 15 துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். 

துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.

எடையை குறைக்கலாம்:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!


எடையைக் குறைக்க தீர்வும் துளசியிடத்தில் இருக்கிறது. துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். 

தோல் நோய்கள் விடைபெறும்:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். 

துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும். 

உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசிச்சாறு ஒரு சிறந்த நிவாரணி.

பேன் தொல்லை இல்லை:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!


துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் பொடுகுத் தொல்லை நீங்கும்.

என்றும் இளமை:

Benefits of Basil Thulasi

இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.

உடலுக்கான கிருமிநாசினி:

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி.  தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது.

கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.  எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

சுத்தமான மண்பானைத் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

வலிகளுக்கு நிவாரணம்:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

வெப்பத்தின் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு துளசியை அரைத்து, அத்துடன் சந்தனப் பொடி கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்து அந்தச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். 

சிறுநீரகக் கோளாறு:

சிறுநீர்க்கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுகிற பிரச்னையும் நிவர்த்தியாகும்.

காயத்திற்கு மருந்து:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச்சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.

துளசி இலை ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பலநோய்களிலிருந்து காக்கிறது.

வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. 

மொத்தத்தில் துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.

முக்கிய குறிப்புகள்:

Benefits of Basil Thulasi
பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

கர்ப்பிணி பெண்கள் துளசி இலையை சாப்பிடுவது உகந்தது அல்ல. மாதவிடாய் நாட்களில் பெண்கள் துளசியை சாப்பிடக் கூடாது, ஏனெனில் துளசி இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இரத்தம் உறைதலை தடுப்பதற்காக மருந்து எடுத்துக்கொள்பவர்கள், வலி நிவாரண மருந்து எடுத்துக் கொள்பவர்கள், துளசி இலையை  சாப்பிடக்கூடாது.