Items required (In English)
400 g Mutton
3 cups Basmati Rice
2 Big onion
2 Tomato
4 Green Chilies
½ tsp Chili powder
½ tsp Biryani powder or Garam masala powder
½ tsp Poppy seeds
6 Garlic sleeves
Ginger - small quantity
Mint leaves - small quantity
Coriander leaves - small quantity
½ Coconut
½ Lemon
2 tsp Oil or butter
3 Cloves
2 Cinnamon
2 Biryani Leaves
5 Cardamon
5 Cashew nuts
தேவையான பொருட்கள் (தமிழில்)
400 g மட்டன்
3 cups பாஸ்மதி அரசி
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
4 பச்சை மிளகாய்
½ tsp தனி மிளகாய் தூள்
½ tsp பிரியாணி தூள் அல்லது கரம் மசாலா தூள்
½ tsp கசகசா
6 பூண்டு பல்
இஞ்சி சிறிதளவு
புதினா சிறிதளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு
½ தேங்காய் மூடி
½ எலுமிச்சை பழம்
2 tsp எண்ணெய் அல்லது பட்டர்
3 கிராம்பு
2 பட்டை
2 பிரியாணி இலை
5 ஏலக்காய்
5 முந்திரி பருப்பு
Mutton Biryani - Preparation guide (In English)
1. For seasoning - Cloves, Cinnamon, Cardamon, Biryani leaves and Cashew nuts
2. Chop the onion, tomato, ginger, garlic, and also cut the green chilies in a vertical way.
3. Grind Coconut and Poppy seeds together and extract the milk from it.
4. Grind the ginger and garlic and have it as a paste.
5. Using a vessel, cook the basmati rice for 75%, and keep it separately.
6. Using a thick vessel or cooker, add butter or oil and add the items listed above for seasoning and then add the chopped onions.
7. Then add one by one the ginger-garlic paste, tomato, green chilies, mint leaves, coriander leaves, chili powder, biryani masala powder or garam masala powder and mix sautee well.
8. Add two to three cups of water and add mutton and cook well for 30 Minutes and make it like masala.
9. Finally, add the one-third cooked basmati rice to the masala and close it with a lid and let it for Dum for 10 Minutes with a slow flame.
10. Once cooked, just add the coriander leaves on top and flip the rice. Trichy style mutton biryani is ready to taste now.
மட்டன் பிரியாணி செய்முறை (தமிழில்)
கமகமக்கும் திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!! செய்து சாப்பிட நீங்க ரெடியா?
1. தாளிக்க வேண்டிய பொருட்கள் : கிராம்பு பட்டை ஏலக்காய் பிரியாணி இலை முந்திரி பருப்பு.
2. முதலில் வெங்காயம் +தக்காளி+இஞ்சி+பூண்டு அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாட்டில் அரிந்து கொள்ளவும்.
3. தேங்காயுடன் கசகசாவையும் அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
4. இஞ்சி+பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
5. பின்பு ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசி முக்கால் பாகம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
6. கனமான ஒரு பாத்திரத்தில் பட்டர் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வைத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தூள் வகைகள் [மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள்] இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பின்பு 2 கப் தண்ணீருடன் மட்டனையும் சேர்த்து 30 நிமிடம் வேக வைத்து மட்டன் மசாலாவை ரெடி செய்து வைத்து கொள்ளவும்.
9. கடைசியில் முக்கால் பாகம் வெந்த சாதத்துடன் வேக வைத்த மட்டன் மசாலா கலவையுடன் சேர்த்து அடுப்பை சிம் இல் வைத்து 10 நிமிடம் தம் போடவும்.
10. சிறிது கொத்தமல்லி தழையை மேலே தூவி 2 முறை கிளறி விட்டால்.. தயாராகிவிட்டது சுவையான திருச்சி ஸ்டைல் மட்டன் பிரியாணி.
CATEGORY
Biryani, Non Vegetarian
CUISINE
Indian
TAGS
#ammasamayal, #biryani, #muttonbiryani, #nonvegbiryani