4 நாட்கள் வேலை செய்தால் போதும்
மத்திய அமைச்சகம் வேலை நாட்கள் தொடர்பாக வரும் நாட்களில், புதிய நெறிமுறைகள் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் புதிய திட்டம்
இப்போது அனைத்து நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரமும் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்.
அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
அரசின் அனுமதி தேவையில்லை
எனினும் நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். இது மாறிவரும் கலாசாரத்து ஏற்ப இருக்கும் என்றும் சந்திரா கூறியுள்ளார்.