Advertisement

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்!

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்!


இட்லி மல்லிகைப் பூ போல மென்மையாகவும், பிசுபிசுவென ஒட்டாமலும் அவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்காக இதோ சில குறிப்புகளைத் தருகிறோம்.

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்!

தமிழர்களின் மாநில உணவு போல பார்க்ப்படுகிறது இட்லி. மல்லிகைப் பூ போன்ற மிருதுவான இட்லியும் அதற்கு ஜோடியாக சுவையான சட்னி, சாம்பார் வைக்கும்போது இட்லியை அடிச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லலாம்.


மல்லிகைப் பூ போல, பஞ்சு போல இட்லி மென்மையாக இட்லி அவிக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த இட்லி அவிக்கும்போது ஒட்டாமலும் வர வேண்டும் அப்போதுடஹன் இட்லி நன்றாக இருக்கும். இட்லி மல்லிகைப் பூ போல மென்மையாகவும், பிசுபிசுவென ஒட்டாமலும் அவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்காக இதோ சில குறிப்புகளைத் தருகிறோம்.

 

சாஃப்ட்டான இட்லி பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம்:

மல்லிகைப் பூ போல, பஞ்சு போல இட்லி மிருதுவாக இருப்பதற்கு முதலில் அனைவரும் கட்டாயம் காட்டன் துணி பயன்படுத்த வேண்டும்.


இட்லி ஊற்றுவதற்கு காட்டன் துணி பயன்படுத்தாமல் அப்படியே இட்லி தட்டில் மாவை ஊற்றினால் இட்லி தட்டில் பிசுபிசு என்று ஒட்டத்தான் செய்யும். அதற்காக, வெறும் தட்டில் மாவு ஊற்றும்போது இட்லி குழிகளில் சிறிது எண்ணெய் தடவியபின் மாவு ஊற்றினால் தட்டில் இட்லி ஒட்டாமல் அழகாக வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எண்ணெய் தடவி இட்லி ஊற்றும்போது சிலருக்கு அது பிடிக்காமல் போகக்கூடும் அப்படியானவர்கள் இட்லி ஊற்றும்போது துணியில் ஒட்டாமல் சாஃப்டாக இட்லி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் இட்லியை வைப்பதற்காக தனியாக சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்த வேண்டும்.

தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்!


பலரும் இட்லி அவிப்பதற்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அளிக்கப்படும் வேட்டியை பயன்படுத்துகின்றனர். அந்த வேட்டியில் பாலிஸ்டரும் கலந்து இருப்பதால் சரியாக வராமல் போகும். அதனால், 100% காட்டன் துணியை பயன்படுத்தி இட்லி அவித்தால் இட்லி ஒட்டாமல் வரும்.


அதோடு, அவசியம் அனைவரும் இட்லி துணியை துவைத்து வெயிலில் காயவைத்து உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இட்லி நன்றாக ஒட்டாமல் சாஃப்டாக வரும்.


இட்லியை ஊற்றும்போது ஒவ்வொரு முறையும் இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடேறியதும் இட்லி துணியை அந்த தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். அப்படி இட்லி துணியை நனைத்து பயன்படுத்தும் இட்லி ஒட்டாமல் வரும்.


அதே போல, இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு பின்னர் இட்லி ஊற்றி அவித்து எடுக்கும்போதும் இட்லி ஒட்டாமல் அருமையாக வரும்.


இட்லி பஞ்சுபோல மென்மையாகவும் ஒட்டாமலும் வருவதற்கு மற்றொரு வழிமுறை, இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும்.

இட்லி ஒட்டாமல் வருவதற்கு, இட்லியை அவித்த பிறகு, இட்லி தட்டில் இருந்து இட்லியை எடுக்கும் முன்னர் சிறிதளவு சுத்தமான தண்ணீரை இட்லி மீது தெளித்து எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் வரும்.


அதே போல, இட்லியை அவசரமாக எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், இட்லி தட்டு பின்புறத்தில் குழாய் தண்ணீரை திறந்து விட்டு குளிர்விக்க வேண்டும். அதன் பிறகு இட்லியை எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் அருமையாக சாஃப்டாக வரும்.


அதே நேரத்தில், இட்லி மிருதுவாகவும் துணியில் ஒட்டாமலும் வருவதற்கு இட்லி மாவு அரைக்கும்போது நாம் சேர்க்கும் பொருட்களும் மாவு அரைக்கும் பதமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.


4 பங்கு இட்லி அரசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்து ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி, ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் ஆகியவற்றை சேர்த்து 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்தால் பஞ்சுபோல குஷ்பு இட்லி மென்மையாக வரும்.


அதே நேரத்தில், இட்லி அவிக்கும்போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இட்லி அவிக்கும் நேரம் ரொம முக்கியமானது. 10 நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க கூடாது. சரியாக 10 நிமிடத்தில் இட்லி அவிந்து அழகாக வர வேண்டும். அதுதான் இட்லியின் சரியான பதம்.


இந்த டிப்ஸ்களைப் லாவகமாக பஞ்சு போல சாஃப்டான இட்லியை அவித்து ஒட்டாமல் எடுத்து அழகாக சாப்பிடுங்கள்.