Advertisement

இட்லி மாவு போண்டா, Idli Batter Bonda Recipe In Tamil

இட்லி மாவு போண்டா


உங்களுக்கு மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது, நல்ல சூடான, காரசாரமான போண்டாவை சாப்பிட ஆசையாக உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் கடலை மாவு எதுவும் இல்லையா? கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் இட்லி/தோசை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே ஒரு அற்புதமான சுவையில், மிகவும் எளிமையான முறையில் போண்டா செய்யலாம். இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னியை செய்து சாப்பிட்டால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.


உங்களுக்கு இட்லி மாவு போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மாவு போண்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இட்லி மாவு போண்டா, Idli Batter Bonda Recipe In Tamil

தேவையான பொருட்கள்:


* இட்லி/தோசை மாவு - 1 கப்


* அரிசி மாவு - 1/4 கப்


* பச்சை மிளகாய் - 1


* வெங்காயம் - 1


* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்


* கறிவேப்பிலை - சிறிது


* உப்பு - சுவைக்கேற்ப


* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:


* முதலில் ஒரு பௌலில் இட்லி/தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.


* பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்லி மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


* பின்பு அதில் அரிசி மாவு, துண்டுகளாக்கப்பட்ட அல்லது துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.


* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.


* எண்ணெய் சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு போண்டா தயார்.


English summary: Idli Batter Bonda Recipe In Tamil Want to know how to make a idli maavu bonda recipe at home? Take a look and give it a try...


Tags: bonda, snacks, recipe, போண்டா, ஸ்நாக்ஸ், ரெசிபி,