Kerala Special
மொளகூட்டல்
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் -1
தேங்காயத் துருவல் - 1 கப்
சிவப்பு மிளகாய் - 2
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்கக் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
மொளகூட்டல் Kerala Palakkad Special |
செய்முறை:
1. வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு, ஒரு சிட்டிகை மிளகாய்த் தூள் சேர்க்கலாம்
2. இன்னொரு பாத்திரத்தில் துவரம் பருப்பை நன்றாக வேகவிடுங்கள், பின்னர் அதனை நன்கு மசித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் துருவிய தேங்காயைக் கலந்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
4. இதற்குள் வாழைக்காய் நன்கு வெந்திருக்கும். அதனுடன் மசித்த துவரம் பருப்பு, தேங்காய் கலவையைச் சேர்த்துக் கிளறிக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் கூடுதல் உப்பு சேர்க்கலாம்.
5. வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை இலைகளைப் போட்டுத் தாளித்து, மொளகூட்டலில் கொட்டவும்.
* மொளகூட்டல் செய்ய வாழைக்காய்தான் வேண்டும் என்று இல்லை . கேரட், பரங்கிக் காய், பீன்ஸ், முட்டைகோஸ், கீரை வகைகள் என்று உங்களுக்குப் பிடித்த எந்தக் காய்கறியையும் இங்கே பயன்படுத்திக்கொள்ளலாம்.
6. மொளகூட்டலுடன் தொட்டுக்கொள்ள தயிர்ப் பச்சடி பயன்படுத்தலாம். அல்லது, அடுத்து வரும் 'அரச்சுக் கலக்கி' என்ற ஐட்டத்தை இதனுடன் சேர்த்துக்கொண்டால் பிரமாதமான காம்பினேஷனாக இருக்கும்.