இந்தியாவில் உள்ள கடலைச் சேரா ஆறு எது?
இந்தியாவில் உள்ள கடலைச் சேரா ஆறு எது? |
நீரின் ஓட்டத்தை ஆறு என்கிறோம். ஆறானது குளங்கள் முதற்றோ, பனிப்பாறைகள் முதற்றோ, ஊற்றுகள் முதற்றோ தோன்றும். பல ஓடைகள் சேர்ந்தொரு ஆறாகலாம். இந்தியாவில் உள்ள ஆறுகள் கிழக்கிலோ மேற்கிலோ உள்ள பெருங்கடல்களில் கலக்கின்றன.
ஆனால், இந்தியாவில் கடலில் கலக்காத ஒரு ஆறு உள்ளது. கடலில் கலக்காவிட்டால் ஆற்றின் கொள்ளளவு என்னாகிறது?
லூனி ஆறு. ஆரவள்ளி மலைத்தொடரின் நாகா மலைகளில் தோன்றி ராஜஸ்தானின் அஜ்மர் மாவட்டத்தின் வழியே பாயும் இந்நதி கடலிலோ பிற ஆறுகளிலோ கலப்பதில்லை. மாறாக, குஜராத்தின் குட்ச் மாவட்டத்தை அடைந்து மீண்டும் ராஜஸ்தானின் தென்மேற்கு பகுதிக்குள் நுழைகிறது. தன் 495 கிலோ மீட்டர் பயணத்தை குட்ச் பாலைவனத்தோடு முடித்துக் கொள்கிறது லூனி.
ராஜஸ்தானில் பெரும்பாலும் தன் காலத்தை கழிக்கும் லூனி, மழைப் பொழிவின்றி பாய்வதில்லை. ஓடையாக தன் பயணத்தைத் தொடர்கிறது. சில முறை வழியிலேயே வறண்டு போய்விடுகிறது. தன் பயணத்தைத் தொடர்ந்தாலும் குட்ச் பாலைவனத்தில் உள்ள தன் ஆற்றுப் படுக்கையில் மரணித்து விடுகிறது.