அரச்சுக் கலக்கி
அரச்சுக் கலக்கி |
தேவையான பொருள்கள்:
பச்சை மாங்காய் - சில துண்டுகள்
துருவிய தேங்காய் - 3 டீ ஸ்பூன்
புளித்த மோர் - 1 கப்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
எண்ணெய் - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் - காரத்துக்கு ஏற்ப
வெந்தயம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைப்பட்டால்
அரச்சுக் கலக்கி |
செய்முறை:
1. மாங்காயை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அரச்சுக் கலக்கி |
2. இத்துடன் துருவிய தேங்காய் மற்றும் பச்சை மிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
அரச்சுக் கலக்கி |
3. அரைத்த கலவையில் புளித்த மோரை ஊற்றி நன்கு கலக்கவும்.
அரச்சுக் கலக்கி |
4. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, சிவப்பு மிளகாய், வெந்தயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
அரச்சுக் கலக்கி |
5. மாங்காய், தேங்காய், மோர் கலந்த கலவையில் இந்தத் தாளித்த கலவையைக் கொட்டிக் கிளறவும், தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம்.
அரச்சுக் கலக்கி |
6. கடைசியாக, 'அரச்சுக் கலக்கி'யைக் கருவேப்பிலை இலைகளால் அலங்கரித்துப் பரிமாறலாம்.
அரச்சுக் கலக்கி |
7. அரச்சுக் கலக்கி தயாரிக்க மாங்காய்மட்டுமின்றி, நெல்லிக்காய், உலர்ந்த நார்த்தங்காய் போன்றவற்றையும்
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் எல்லாவகையான 'மொளகூட்டல்'களுக்கும் தொட்டுக்கொள்ள இதனைப் பயன்படுத்தலாம்.
அரச்சுக் கலக்கி |