Advertisement

உருளைக் கிழங்கு ஸ்டூ, Potato Stew, Kerala Palakkad Special, Amma Samayal.

Kerala Special

உருளைக் கிழங்கு ஸ்டூ 

தேவையான பொருள்கள்: 

உருளைக் கிழங்கு - 2 அல்லது 4 (அளவைப் பொறுத்து) 

தக்காளி - 2 

மிளகாய் - 4 

துவரம் பருப்பு - 1/2 கப் 

எண்ணெய் - 2 டீ ஸ்பூன் 

தேங்காய் - 1/2 

கொத்தமல்லி விதைகள் - சிறிதளவு 

கடலைப் பருப்பு - சிறிதளவு 

உளுத்தம் பருப்பு - சிறிதளவு 

மஞ்சள் தூள் - சிறிதளவு 

தாளிக்கக் கடுகு, சீரகம் 

உப்பு - தேவையான அளவு 

கருவேப்பிலை - சிறிதளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

உருளைக் கிழங்கு ஸ்டூ, Kerala Palakkad Special, Amma Samayal.
உருளைக் கிழங்கு ஸ்டூ, Kerala Palakkad Special, Amma Samayal.

செய்முறை: 


* உருளைக் கிழங்கைப் பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும். பின்னர் அதனைத் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கொத்தமல்லி விதைகளைப் போட்டு வறுக்கவும் 


* தேங்காயை உடைத்துத் துருவி, அரை கப் அளவில் எடுத்துக்கொள்ளவும். இதேபோல் தக்காளியையும் நறுக்கிச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் 


* வாணலியில் வறுத்த கலவை, தேங்காய்த் துருவல் இரண்டையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும், நன்றாகப் பசைபோல் அரைத்து எடுத்துக்கொள்ளவும் 


* அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டுக் கடுகை வெடிக்கவிடவும், பின்னர் அதனுடன் சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும், இத்துடன் தக்காளித் துண்டுகளையும் போட்டுப் பிரட்டி எடுக்கவும் 


* வேக வைத்த உருளைக் கிழங்குத் துண்டங்களை வாணலியில் போட்டு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும், நன்றாகக் கொதிக்க விடவும் 


* கடைசியாக, மிக்ஸியில் அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் 


* அரைத்த விழுதைச் சேர்த்தபிறகு, இந்தக் கலவையை நன்றாகக் கொதிக்கவைக்கவேண்டும், நன்கு கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்துவிட்டுக் கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறலாம் 


* உருளைக் கிழங்குக்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்த எந்தக் காய்கறி அல்லது பயறு வகையையும் சேர்த்து ஸ்டூ தயாரிக்கலாம். பல வகைக் காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்துச் செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.