OMTEX AD 2

மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.

மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...
மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.
மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.



கோடைக்காலம் என்றாலே வெயிலுக்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது மாம்பழங்கள் தான். இந்தியாவில் பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் உலகிலேயே அதிக வெரைட்டியான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் தான். ஆகவே கோடைக்காலத்தில் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விலை குறைவில் விற்கப்படுவதைக் காணலாம்.

மாம்பழங்கள் விலை குறைவில் கிடைப்பதால், பலரும் தங்கள் வீடுகளில் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவார்கள். பழங்களின் ராஜாவும், இந்தியாவின் தேசிய பழமுமான மாம்பழம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்டது. மாம்பழங்களைக் கொண்டு பல்வேறு சுவையான ரெசிபிக்களை செய்யலாம். என்ன தான் மாம்பழம் ஒரு ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், மாம்பழத்தை சாப்பிட்டதும் ஒருசில உணவுகளை சாப்பிட்டால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கீழே மாம்பழம் சாப்பிட்ட பின் சாப்பிடக்கூடாத சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


தண்ணீர் 

மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மாம்பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரைக் குடிப்பது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வயிற்று வலி, அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். வேண்டுமானால் மாம்பழம் சாப்பிட்ட அரை மணிநேரத்திற்கு பின் தண்ணீர் குடிக்கலாம்.


தயிர் 

ஒரு கப் தயிரில் மாம்பழங்களை துண்டுகளாக்கி சேர்த்து சாப்பிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடுவது உடலில் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை ஒரே சமயத்தில் உருவாக்கி, சரும பிரச்சனைகள், உடலில் நச்சு தேக்கம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.


பாகற்காய் 

மாம்பழம் சாப்பிட்டதும் பாகற்காயை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் மாம்பழம் சாப்பிட்ட உடனேயே பாகற்காயை சாப்பிடுவதால், அது குமட்டல், வாந்தி மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.


காரமான உணவுகள் 

காரமான உணவுகள் அல்லது மிளகாய் சேர்த்த உணவுகளை மாம்பழம் சாப்பிட்டதும் சாப்பிடாதீர்கள். ஏனென்றால், இது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மாம்பழம் சாப்பிட்டதும் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால், முகப்பரு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.


குளிர் பானங்கள் 

மாம்பழங்களை சாப்பிடும் போது குளிர்பானங்களைக் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை அளவுக்கு அதிகமாக நிறைந்த குளிர்பானங்களை உடனே குடிக்கும் போது, சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்து, பேராபத்தை ஏற்படுத்திவிடும்.

OMTEX CLASSES AD