ஆரோக்கியமான காலை உணவுக்கு ஆப்பம்; இப்படி மாவு அரைச்சு பாருங்க!
Tasty Aappam Recipe : காலை உணவுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆப்பம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்போமா?
தமிழகர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று ஆப்பம். அரிசி மாவில் செய்யப்படும் இந்த உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இதன் தோற்றம் தோசை போலவே இருந்தாலும் தோசைக்கு நிகரான சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் தரக்கூடியது ஆப்பம். இந்த ஆரோக்கியம் நிறைந்த ஆப்பத்தை சுவையாக செய்வது எப்படி என்பதை பார்போமா?
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சை அரிசி – 2 கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
ஊளுந்து – ஒன்னரை டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – அரை டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – சிறிதளவு
ஆப்ப சோடா – சிறிதளவு
சோடா வாட்டர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில், இட்லி அரிசி பச்சை அரிசி, ஒளுந்து வெந்தயம் ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊறவைத்து,துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக ஆட்டிக்கொள்ளவும். அடுத்து இந்த மாவில், தேங்காய் பால் சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
அடுத்து புளித்த மாவில் சிறிதளவு ஆப்ப சோடா மற்றும் சோடா வாட்டரை சேர்த்து கரைக்கவும். பின்பு அடுப்பில் காடாய் வைத்து சூடேரியதும் அதில் மாவை இட்டு கடாயயை சுழற்றி வைக்கவும். சுமார் ஒன்னரை நிமிடத்தில் ஆப்பம் தயாராகி விடும். இதில் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.