Advertisement

வெஜிடபிள் பிரியாணி - Vegetable Biryani By Amma Samayal.

வெஜிடபிள் பிரியாணி

தேவையானவை: 

பாசுமதி அரிசி - 2 கப், 

பெரிய வெங்காயம் - 2, 

தக்காளி - 3, 

கேரட் - 1, 

உருளைக்கிழங்கு - 1, 

பட்டாணி - ஒரு கைப்பிடி, 

புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, 

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 

வெஜிடபிள் பிரியாணி -  Vegetable Biryani By Amma Samayal
வெஜிடபிள் பிரியாணி -  Vegetable Biryani By Amma Samayal

அரைக்க: 

சின்ன வெங்காயம் - 10, 

இஞ்சி - ஒரு துண்டு, 

பூண்டு - 6 பல் (சிறிய பூண்டாக இருந்தால் 8 பல்), 

காய்ந்த மிளகாய் - 3, 

தனியா - 2 டீஸ்பூன், 

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, 

சீரகம் - அரை டீஸ்பூன், 

தயிர் - அரை கப், 

கசகசா - ஒரு டீஸ்பூன். 


தாளிக்க: 

பிரிஞ்சி இலை - சிறிதளவு, 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், 

நெய் - 2 டேபிள்ஸ்பூன். 


செய்முறை: 

அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள். காய்கறிகளை வெஜிடபிள் பிரியாணிக்கு சொன்னது போலவே நறுக்குங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, காய்கறிகளையும் தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.