Advertisement

இந்த உணவுகள் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரவே வராது. இளம் வயதினரையும் தாக்கும் இதயநோய்க்கு இனி குட் பை.

இந்த உணவுகள் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரவே வராது. இளம் வயதினரையும் தாக்கும் இதயநோய்க்கு இனி குட் பை.

இந்த உணவுகள் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரவே வராது.


இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும், தற்போதய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது.சில உணவுகளை சாப்பிட்டால் அது மாரடைப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பூண்டு

இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, மாரடைப்புகளை பூண்டு தடுக்கும். 


ஆரஞ்ச் 

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இந்த ஆரஞ்சை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். இவை இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை சரி செய்ய உதவுகிறது.


மாதுளை 

இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்கிறது மாதுளை. இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.


பாதாம் 

வைட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம் இதயத்திற்கு பல வித நன்மைகளை தரும். அத்துடன் பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை போன்றவையும் இதய ஆரோக்கியத்தை காக்குமாம். மேலும், இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை குறைக்க கூடியதாம்.


தக்காளி 

உணவில் பெரும்பாலும் நாம் சேர்த்து கொள்ளும் இந்த தக்காளியில் உள்ள lycopene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்து உடல் நலம் நன்றாக இருக்கும். குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டதாம்.