எல்லா காய்கறிகளையும் ஒரே மாதிரியாக ஸ்டோர் செய்ய முடியாது. பருவ காலத்துக்கு ஏற்ப மட்டுமே கிடைக்கும் காய்கறிகளை, முறையாக உறைய வைத்து சுமார் 6 மாதங்கள் வரை ப்ரீசரில் வைத்து சமைத்துக் கொள்ள முடியும்.
கேரட், பீன்ஸ் என காய்கறிகளை 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க டிப்ஸ்…! |
காய்கறிகளை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்வதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா காய்கறிகளையும் ஒரே மாதிரியாக ஸ்டோர் செய்ய முடியாது.அதேபோல், சில காய்கறிகள் எல்லா நாட்களிலும் கிடைக்காது. பருவ காலத்துக்கு ஏற்ப மட்டுமே கிடைக்கும் காய்கறிகளை, முறையாக உறைய வைத்து சுமார் 6 மாதங்கள் வரை ப்ரீசரில் வைத்து சமைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக, கேரட் மற்றும் பீன்ஸை 6 மாதம் வரை ப்ரீசரில் கெடாமல் வைத்திருக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றன. இதனை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
காய்கறிகளை தயார் செய்தல் : கேரட், பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை எல்லா நாட்களிலும் கிடைக்காது. பருவ காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய காய்கறிகள் என்பதால், அதனை முறையாக உறைய வைத்து 6 மாதங்கள் வைத்திருந்து சமைத்து சாப்பிட முடியும். முறையாக ஸ்டோர் செய்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. பட்டாணி, கேரட், பீன்ஸை முதலில் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பின்னர், கேரட்டை சிறு சிறு துண்டுகளாகவும், பட்டாணியை தோலுரித்து தனித் தனியாக வைக்க வேண்டும். இதேபோல், பீன்ஸையும் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள்.
கொதிக்க வைத்தல் : பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் முக்கால்வாசி (3/4) தண்ணீர் நிரப்பி, தயார் செய்து வைத்திருக்கும் காய்கறிகளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒன்று அல்லது 2 டீ ஸ்பூன் உப்பு தூவி விட்டு, கலக்கிவிடுங்கள். முதலில் நெருப்பை வேகமாக வைத்து கொதிக்கவிட்டு, சிறிது நேரத்துக்கு பின்னர் மிதமான சூட்டுக்கு கொண்டு வரவேண்டும். கேரட் கொதித்த பிறகு, பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றை தனித்தனியாக இதேபோல் கொதிக்க வைக்க வேண்டும்.
காய்கறிகளை உலர்த்துதல் : குளிர்ந்த நீர் இருக்கும் கண்ணாடி கிண்ணத்தில் வேக வைத்த காய்களை போட வேண்டும். அதில் ஐஸ் கியூப்புகளை போட வேண்டும். 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் இருந்து வடிக்கட்ட வேண்டும். பிறகு, டவல் துணி ஒன்றை எடுத்து, அதில் கேரட்டை பரப்பி உலர்த்தி வைய்யுங்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு விசிறியின் கீழ் வைத்து மீண்டும் உலர வைக்க வேண்டும். இதே பாணியில் மற்ற காய்கறிகளையும் உலர வைக்க வேண்டும்.
ஸ்டோர் செய்தல் : நன்கு உலர வைத்திருக்கும் கேரட்டை, ஜிப் லாக் பையில் போட்டுக்கொள்ளுங்கள். அந்த பையில் காற்று இருக்கக்கூடாது. மற்ற காய்களையும் ஜிப் லாக் பேக்கில் இதேபோல் வைத்து, பீரிசரில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை சுமார் 6 மாதங்கள் வரை ப்ரீசரில் வைத்து சமைத்து சாப்பிடலாம். உலர்ந்த காய்கறிகளை வைக்கும் பேக்கிற்குகள் காற்று புகக்கூடாது.