ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாவார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரது தந்தை வழி தாத்தாவும், நடிகர் கே. ஆர். ராமசாமி தாய் வழி தாத்தாவும் ஆவர்.
2012-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி சார்பில் சிறந்த பாடகிக்கான விருதையும் (பாடல் - சற்று முன்பு பார்த்து... படம் - நீதானே என் பொன்வசந்தம்). 2013 ஜூலை 20-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற 60வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் விருதுகளை வென்றுள்ளார்.
பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு செய்தியை அறிந்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல பாடகியும் பிக் பாஸ் போட்டியாளருமான NSK ரம்யா, ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான பதிவை போட்டு அவரின் இறப்பிற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடைய அப்பாவாக, சகோதரனாக, நண்பனுக்கும் மேலாக இருந்தவர். என்னுடைய மகிழ்ச்சி. மற்றும் துன்பம் இரண்டையும் அவருடன் நான் பகிர்ந்து இருக்கிறேன். எப்படி வாழ வேண்டும் எப்படி மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்பதை எப்போதும் எனக்கு சொல்லித்தந்தவர். என்னுடைய கணவர் சத்யாவை (இரண்டாம் கணவர்) திருமணம் செய்துகொள்வதற்கு கூட இவரிடம் சம்மதத்தை கேட்டேன்.
சின்ன தவறுகளுக்கு கூட என் அம்மா, இவரிடம் ‘பாருப்பா’ என்று சொன்ன போதெல்லாம், என் தங்கச்சி அப்படி எல்லாம் கிடையாது. அவளை பற்றி எனக்கு தெரியும் என்று சொன்னவர். நான் சந்தித்த மனிதர்களில் சிறந்த குணம் கொண்டவர். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பார்.யாராவது இவரை வெளியில் பார்த்துவிட்டு இவருடன் புகைப்படம் எடுக்க நினைத்து தயங்கி நின்றால் இவரே அவர்களிடம் சென்று பேசுவார்.
அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இனி நான் உன்னை பார்க்க முடியாது அண்ணா. உனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் ஒரு சிறப்பான இடம் இருக்கும்.அவருக்கு என்ன ஆனது என்று கேட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு, அவருக்கு ஆசன குடல் புற்று நோய் இருந்தது. அது அவரின் உடல் முழுவதும் பரவிவிட்டது என்று மிகவும் உருக்கமான ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார் ரம்யா.