Advertisement

1 மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறைய, பசிக்காமல் இருக்க, இதை சாப்பிடுங்கள் போதும்!

1 மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறைய, பசிக்காமல் இருக்க, இதை சாப்பிடுங்கள் போதும்!

இன்று இருக்கும் உணவு முறைக்கு உடல் பருமன் பிரச்சனை என்பது சாதாரணமாக அனைவருக்குமே உண்டு. யாருக்குத் தான் உடல் பருமன் இல்லை? பழங்கால உணவு முறைப்படி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சீராக வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இப்பொழுது நவீன நாகரீகம் என்கிற பெயரில் கண்டதையும் சாப்பிட்டு விட்டு உடல் எடையை கூட்டிக் கொண்டு சோம்பேறி ஆகி விடுகிறோம்.

stomach-pain

நாம் நம்முடைய உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடும் பொழுது பொய் பசியை உண்டாக்கி விடுகிறது. இதற்கு விளம்பரங்களில் வரும் காட்சி அமைப்புகள் கண்களை கவர்வதும் ஒரு காரணமாகும். சத்தான, ஆரோக்கியமான உணவு நாம் எடுக்காவிட்டால் நம் உடலில் இயல்பாகவே பொய் பசி என்பது வந்துவிடும். பொய் பசி என்பது நமக்கு பசிக்காமலேயே பசிப்பது போல ஒரு உணர்வை உண்டாக்குவது தான். அப்போது தான் வயிறு முழுக்க சாப்பிட்டிருப்போம். ஆனால் அப்படி இருந்தும் கூட மறுபடியும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்கிற உணர்வை தூண்டுவது தான் பொய் பசி ஆகும்.

இந்த பொய் பசியை கட்டுப்படுத்தினால் நம் உடல் எடையையும் நம்மால் சுலபமாக எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுப்படுத்திவிட முடியும். பசியை கட்டுப்படுத்தக்கூடிய இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அப்படியான உணவுப் பொருட்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Badam benefits in Tamil

பொய் பசி ஏற்படும் சமயங்களில் நீங்கள் பாதாம் பருப்புகளை எடுத்து சாப்பிட்டு வரலாம். பாதாமில் மக்னீசியம், வைட்டமின் பி, ஆக்சிஜனேற்றிகள், நார் சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஏராளமாக அடங்கி இருப்பதால் மூன்று, நான்கு பாதாம் பருப்புகளை சாப்பிடும் பொழுது வயிறு நிரம்பியது போல தோன்றி விடும்.

ஸ்டியரிக் அமிலம் கொண்ட டார்க் சாக்லெட்டுகள் நம் உடலில் செரிமானத்தை மெதுவாக ஏற்படுத்தும் என்பதால் இதனை ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் பசிக்கும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். இதில் கோகோ அதிகமாக இருப்பதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது. இதனை அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

pattai

லவங்க பட்டை சிறிதளவு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் அதனை நீங்கள் சாப்பிடும் உணவில் ஐந்து கிராம் அளவுக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பொய் பசியை முற்றிலுமாக அடக்கி விடும். இதனால் உடல் எடையானது வேகமாக கூடுவது எளிதாக தடுக்கப்படும்.

vendhaya-water

வெந்தயம் உடல் உஷ்ணத்தை மட்டும் தடுப்பது அல்ல! இரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலையில் வெந்தயத்தை சேர்த்து தண்ணீரையும் குடித்தால் உடல் உஷ்ணம் முழுவதும் குறைந்து குளிர்ச்சி ஆகிவிடும். மேலும் அதில் இருக்கும் ஃபைபர் செரிமான அமைப்பில் செயல் புரிந்து நமக்கு பொய் பசி உண்டாவதை தடுக்கும். அதிக நார்ச்சத்து கொண்ட வெந்தயம் தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ginger 3-compressed

செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் இஞ்சி உடல் எடை குறைக்க பெருமளவு உதவி புரிகின்றது. நீங்கள் எடுக்கும் உணவில் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்பட்டால் தேவையில்லாத பசி ஏற்படுவது தடுக்கப்படும். இஞ்சி டீ, இஞ்சி சாதம், இஞ்சி துவையல், இஞ்சி சட்னி என்று எந்த வகையிலும் இஞ்சியை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பொழுது விரைவாக பசி எடுக்காது. ஆகவே மேற்கூறிய இந்த விஷயங்களை பின்பற்றும் பொழுது பொய் பசி என்பது ஏற்படாமல் இருக்கும் இதனால் உடல் எடை கணிசமாக குறையும்.