Advertisement

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நமக்கு காய்ச்சல், இருமல், சளி, போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வருவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் இருக்கக்கூடிய மாற்றங்கள் சீக்கிரமே நம்மை நோய் தொற்றுக்கு ஆளாக்கி விடுகின்றது. அதுவும் இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் நோய் கிருமிகள் நம்மை சுலபமாக எளிதாக தாக்கி விடுகின்றது. நோய்க் கிருமிகளிடமிருந்து, நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் சுலபமான முறையில் என்ன செய்யலாம். ஒரு டம்ளர் பசும்பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தாலே போதும்.

milk1

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு பசும்பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். 200ml அளவு பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 வெள்ளைப்பூண்டை தட்டி போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், சுக்கு 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொடியையும் சேர்த்து பாலை நன்றாக கலந்து விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் இதை வடிகட்டி குடிக்கலாம். அப்படியேவும் குடிக்க முடியும் என்று நினைப்பவர்கள் இதை ஒரு டம்ளரில் ஊற்றி நாட்டுசர்க்கரை 1 ஸ்பூன் அல்லது தேன் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து விட வேண்டும். இனிப்பு உடம்பிற்கு சேராது என்று நினைப்பவர்கள் எதுவுமே போடாமல் வெறும் பாலை குடித்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். இதில் போட்ட பூண்டை தூக்கி வீணாக கீழே போடாமல் அப்படியே மென்று சாப்பிட்டு விடலாம்.

poondu

ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்த பாலை வடிகட்டிக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு 50ml அவர்களுக்கு இந்தப் பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை பசும்பாலை பயன்படுத்துவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபிக்கு பதிலாக இந்த பாலை குடிக்க வேண்டும். முடிந்தால் மாலை 5 மணி அளவில் ஒரு டம்ளர் இந்த மாதிரி பாலை காய்ச்சி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை.


இன்றைய சூழ்நிலையில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய இந்த பால், நாம் அனைவருக்கும் தேவை. நுரையீரல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க, சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, இப்படியாக பல உடல் உபாதைகளுக்கு தீர்வை கொடுக்கக் கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் பாலுக்கு உண்டு.

milk1

எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.