Advertisement

1 டீஸ்பூன் காப்பித்தூள் இருந்தால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி ஒரே வாரத்தில் கருப்பான முகமும் உங்களின் உண்மையான நிறத்தை பெற்று தருமாம் தெரியுமா?

1 டீஸ்பூன் காப்பித்தூள் இருந்தால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி ஒரே வாரத்தில் கருப்பான முகமும் உங்களின் உண்மையான நிறத்தை பெற்று தருமாம் தெரியுமா?

mugakarumai

தகதகவென ஜொலிக்கும் அழகு எல்லாருக்கும் பிடிக்கத்தான் செய்யும்! யாருக்குத்தான் தான் வெள்ளையாக இருப்பது பிடிக்காமல் போகும்? கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். என்ன ஏன்மா கருப்பா பெத்த? என்று கேட்கும் பிள்ளைகளும், வெள்ளையா இருந்தா அழுக்காயிடுவேன்னு தான் கருப்பா பெத்தேன்னு சொல்லும் தாய்மார்களும் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் நிறைய உண்டு.

black-face

முகத்தில் சிறுக சிறுக படியும் கருமை வெள்ளையாக இருப்பவர்களைக் கூட கருப்பாக தான் காட்டிவிடுகிறது. அப்படி இருக்கும் பொழுது ஏற்கனவே கருப்பான தோற்றம் உடையவர்களுக்கு கருமை படர்ந்தால் என்ன நடக்கும்? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான். நம் முகத்தின் ஒரிஜினல் நிறமும், வெயிலின் கடுமை பாதித்து வரக்கூடிய நிறத்திலும் நிறையவே வித்தியாசம் உண்டு. சிலருக்கு வெயில் படும் முகம், கை, கழுத்து பகுதிகள் மட்டும் கருப்பாகவும், உடல் வெள்ளையாகவும் இருக்கும். இது அதிகப்படியான வெயிலில் அலையும் நபர்களுக்கு ஏற்படும் இயல்பான பிரச்சனை தான்.

சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக நம் உடம்பின் மீது படும் பொழுது மெலனின் உற்பத்தி குறைந்து நிற மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. இதைக் கவனிக்கத் தவறினால் நாளடைவில் நம்முடைய இயற்கை நிறம் மறைந்து நம் முகம் முதல் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும் அபாயமும் உண்டு. இதனால் தான் வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள் அதற்கு உரிய சன் கிளாஸ், மாய்ஸ்சுரைசர் லோஷன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். கூடுமானவரை முகத்தை துணியால் மறைத்து கொண்டு வெயிலில் அலைவது நல்லது.

coffee-cream

சரி வெயிலில் அலைந்து வந்தாச்சு! கை, கால், முகமும், கழுத்தும் கருப்பாகி விட்டது. இனி என்னதான் செய்வது? என்று புலம்புபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முகம் கருமை நீங்கி வெள்ளையாக மாறவும், இறந்த செல்கள் மீண்டும் புத்துணர்வு பெறவும் செய்யக் கூடிய இந்த குறிப்புகளுக்கு தேவையான பொருட்கள் ஒரு டீஸ்பூன் காபி தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தயிர் ஆகியவை ஆகும்.


coffee-face

ஒரு கண்ணாடி பௌலில் இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். காபி தூள், அரிசி மாவு, தயிர் இந்த மூன்றும் ஒரு ஐந்து நிமிடம் வரை நன்கு கலந்து விட்டால் கிரீம் போல மாறிவிடும். இதற்கு தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. இந்த க்ரீம் போன்ற காஃபி ஃபேஸ் பேக் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு தடவி கொள்ளுங்கள். பத்து நிமிடத்திற்கு நன்கு கைகளால் ஆண்டி கிளாக்வைஸ் மற்றும் கிளாக்வைஸ் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்து வாருங்கள். பின்னர் 20 நிமிடங்கள் அமைதியாக படுத்துக் கொள்ளுங்கள்.

coffee-face1

இந்த பேக் போட்டு நன்கு ஓய்வு எடுத்தால் முகத்திற்கும் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். கண்களுக்கு வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து நன்கு காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரினால் அலசி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு ஃபேஸ் பேக் போட்டு முகத்தை பாதுகாத்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முக கருமை படிப்படியாக குறைந்து இயற்கையான நிறத்தை மீட்டு தரும். இதனை இரவு தூங்கும் முன்பும் செய்யலாம் அல்லது பகல் பொழுதிலும் நீங்கள் செய்து கொள்ளலாம்.