Advertisement

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா? உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவும் 12 வகையான உணவுகள் இதோ!

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா? உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவும் 12 வகையான உணவுகள் இதோ!

நன்றாக இருந்த ஒருவர் திடீரென உடல் பருமனாகும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். குண்டாக இருக்கும் எவரும் அதிகமாக சாப்பிடுபவர்கள் அல்ல! அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே குண்டாவது இல்லை. சிறுவயது முதலே கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதால் வரும் விளைவுகளாக நாளடைவில் உடல் பருமனாக மாறி தொந்தரவை ஏற்படுத்துகின்றன. இதற்கு நம் உணவு முறை மாற்றமும் ஒரு காரணமாகும். இதனால் ரத்தக் குழாய்கள் மட்டுமின்றி, முக்கிய உறுப்புகளும் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைகின்றன. உடலில் தங்கும் கொழுப்புகளைக் கரைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்! ஆனால் அதற்கும் நமக்கு நேரமில்லாமல் போகிறது. சரி அப்படி என்ன செய்து நம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை விரைவாக அகற்றுவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

1. ஆப்பிள்

ஆப்பிள்


உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும். ஆப்பிளில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ளதால் எளிதில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.

2. கத்தரிக்காய்

கத்தரிக்காய்

கலோரிகள் இல்லாத காய்கறி என்றால் அதில் கத்தரிக்காயும் இடம்பெறும். கத்தரிக்காய் எவ்வளவு சாப்பிட்டாலும் நம் உடம்பில் கலோரிகள் ஏறுவதில்லை. இதில் இருக்கும் நார்சத்து கெட்ட கொழுப்பை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது, எனவே அடிக்கடி உங்கள் உணவில் கத்தரிக்காயை சேர்த்து வந்தால் கொலஸ்ட்ராலை விரைவாக கரைக்கலாம்.


3. பார்லி

barli-rice

தானிய வகையை சேர்ந்த பார்லியில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய நார்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அடிக்கடி பார்லியை காலை உணவாக எடுத்துக் கொள்வது கொழுப்பை கரைப்பது மட்டுமல்லாமல் நல்ல ஒரு ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.


4. மீன்

மீன்

அசைவ உணவுகளை உண்பவர்கள் அடிக்கடி மீன் சேர்த்துக் கொள்வது நல்லது. மீன் கெட்ட கொழுப்பை கரைக்க உதவும். மீனில் இருக்கும் நல்ல கொழுப்புகள் அதிகமாக உட்கொள்ளும் பொழுது, கெட்ட கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படும். குறிப்பாக டூனா, சால்மன் போன்ற மீன் வகைகள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும்.


5. வெங்காயம்

வெங்காயம்

பொதுவாகவே உணவில் வெங்காயம் அதிகம் சேர்ப்பது உண்டு. வெங்காயத்தில் இருக்கும் பிளேவனாய்டு ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து அகற்றும். இதனால் அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்து வந்தால் இதயம் பலம் பெறும்.

6. தேயிலை

தேயிலை

தேயிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது ஆகும். இதனால் தான் க்ரீன் டீ, பிளாக் டீ போன்ற டீ வகைகள் வெகு விரைவாக கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து விடுகிறது. எனவே பால் சேர்க்காத தேநீரை தொடர்ந்து அருந்தி வந்தால் விரைவாக கொலஸ்ட்ரால் குறையும்.


7. நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகள்

பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது விரைவாக நம் உடம்பில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும் பொழுது நட்ஸ் வகைகளை சாப்பிட்டால் பசி எனும் மாயை மறையும்.

8. ஓட்ஸ்

ஓட்ஸில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இதனை காலை உணவாக தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் இயல்பாகவே கரையும்.


9. பழங்கள்

சாதாரண பழங்களை விட சிட்ரஸ் நிறைந்துள்ள ஆரஞ்சு, பெர்ரீஸ் பழங்கள், எலுமிச்சை போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் பெக்டின் என்னும் மூலக்கூறு ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து அகற்றும்.

10. முழு தானியம்

எந்த ஒரு தானியத்தையும் முழுதாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். முழு தானியங்களில் திணை, கேழ்வரகு போன்ற தானியங்கள் அதிக நன்மைகளை செய்யக் கூடியவையாக இருக்கும். எண்ணற்ற நார் சத்துக்கள் இதில் உள்ளதால் நம் உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றும்.


11. பசலை

Pasalai keerai

கீரைகளில் பசலைக் கீரையில் லூடின் என்னும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது நம் உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும் எனவே குறைந்தது வாரம் ஒரு முறையாவது பசலைக்கீரையை உணவில் சேர்த்து வருவது நலம் பயக்கும்.


12. சோயா

சோயா

சோயாவிலும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் இயற்கையாகவே அதிகம் நிறைந்துள்ளதால் அடிக்கடி சோயாவை உணவில் சேர்த்து வருவதும் உடல் பருமனை குறைத்து இதயத்திற்கு வலு சேர்க்கும்.