Advertisement

ஆயுசுக்கும் இனி சர்க்கரை நோயை கண்டு பயப்பட வேண்டாம். 15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக விரட்டியடிக்க 1 ஸ்பூன் இந்தப்பொடி போதும்.

ஆயுசுக்கும் இனி சர்க்கரை நோயை கண்டு பயப்பட வேண்டாம். 15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக விரட்டியடிக்க 1 ஸ்பூன் இந்தப்பொடி போதும்.

சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய ரத்தத்தில் இருக்கும் சிறுநீரகத்தில் இருக்கும் சர்க்கரை நோய் படிப்படியாக குறைய இந்த பொடி மிகவும் உதவியாக இருக்கும். இயற்கையான முறையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக சில பேருக்கு மிகவும் அவசரமாக சிறுநீர் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குக் கூட இந்த பொடி 15 நாட்களில் நல்ல தீர்வினைக் கொடுக்கும்.

sugar1

இயற்கை மூலிகை பொடி தயார் செய்ய தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 100 கிராம், கருப்பு கொண்டைக்கடலை – 200 கிராம், நெல்லி வற்றல் – 50 கிராம், கருஞ் சீரகம் – 50 கிராம், மருதம்பட்டை – 50 கிராம், நாவல்கொட்டை – 50 கிராம். மாம்பருப்பு பொடி – 100 கிராம், வேப்பிலை சூரணம் – 50 கிராம்.

முதலில் வெந்தயத்தையும், கருப்பு கொண்டை கடலையையும் தனித்தனியாக தண்ணீரில் போட்டு 6 லிருந்து 7 மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். அதன் பின்பு இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரிலிருந்து வடிகட்டி எடுத்து தனித்தனியாக ஒரு வெள்ளைத் துணியில் போட்டு முளை கட்டி வைக்கவேண்டும். ஒருநாள் முளை கட்டி வைத்தால் இந்த இரண்டு பொருட்களிலும் முளை வந்துவிடும்.

sugar2

அதன் பின்பு இரண்டு பொருட்களையும் தனி தனியாக ஒரு தட்டில் போட்டு, மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை வீட்டுக்கு உள்ளே ஃபேன் காற்றில் நன்றாக ஆற வைத்து விட வேண்டும். தினம்தோறும் தட்டில் இருக்கும் இந்த பொருட்களை உங்கள் கையை கொண்டு கிளறி விட்டுக் கொண்டே இருங்கள். இல்லை என்றால் அடியில் பூசணம் பிடித்துவிடும்.

அதன்பின்பு முளைக்கட்டி உலரவைத்த இந்த இரண்டு பொருட்களோடு மேலே சொல்லப்பட்டிருக்கும் நெல்லி வற்றல், நாவல் கொட்டை, மருதம் பட்டை, கருஞ்சீரகம் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து மொத்தமாக 6 பொருட்கள் வரும். இதை ரைஸ் மில்லில் கொடுத்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

sugar3

இறுதியாக இந்தப் பொடியோடு மாம்பருப்பு பொடியையும் வேப்பிலை சூரண பொடியையும் நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரோடு 1/2 ஸ்பூன் இந்தப் மூலிகை பொடியை கலந்து குடித்து விட வேண்டும். காலை வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க வேண்டும்.

sugar4

மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் இந்த பொடியை 1/2 ஸ்பூன் அளவு சேர்த்து குடித்து விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை. அவ்வளவு தான். 15 நாட்களுக்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய சர்க்கரை நோய் பிரச்சனையில் நல்ல வித்தியாசம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.