உச்சி முதல் பாதம் வரை எல்லா நோயும் குணமாக 15 நிமிடம் தினமும் 8 போட்டு நடந்து பாருங்கள்! எட்டு நடை பயிற்சியின் பலன்கள் என்ன?
எட்டு நடைப்பயிற்சி என்பது பத்தடி அகலமும் பதினைந்து அடி நீளமும் கொண்ட இடத்தில் 8 என்கிற வடிவத்தை வரைந்து கொள்ள வேண்டும். அதில் எட்டு போல் எப்படி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறோம்? அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதில் தான் சூட்சமம் உள்ளது. இந்த பயிற்சியை யார் வேண்டுமானாலும் வயது வித்தியாசம் இல்லாமல் செய்யலாம். இந்த பயிற்சியை தலைகீழாக செய்யக் கூடாது. அதை முறையாக எப்படி செய்ய வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி எட்டு என்கிற இந்த வடிவத்தின் கீழ்ப்புறத்தில் இடது பக்கத்திலிருந்து ஆரம்பித்து மேல்புறத்தில் வலது பக்கம் வழியாக சென்று, பின் இடதுபுறம் வந்து மீண்டும் கீழ்ப்பகுதியில் இருக்கும் வலது பக்கத்தை அடைவது தான் முறையாக சுற்ற வேண்டிய பயிற்சியாகும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை சுற்றுகள் வேண்டுமானாலும் சுற்றலாம்.
இந்த பயிற்சி எடுத்துக் கொள்ளும் முன் சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்பிக்கும் முன்பு தேவையான அளவிற்கு தண்ணீரை குடித்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 15 நிமிடம் எட்டு வடிவில் சுற்றினால் கிடைக்கக் கூடிய பலன்கள் எல்லை இல்லாதவை. இப்படி எட்டு வடிவில் சுற்றுவதால் மூக்கில் இருக்கும் இரண்டு துவாரங்களுக்குள் நல்ல சுவாசம் கிடைக்கும். இதனால் உடல் அதிக சக்தி பெற்று உடலில் இருக்கும் எல்லா வியாதிகளையும் எளிதாக குணப்படுத்துகிறது.
மூளை மற்றும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் புத்துணர்ச்சி பெறுவதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நரம்பு மண்டலங்கள் வலுவாகி மன அழுத்தத்தை குறைக்கிறது. உடல் உறுப்புகள் அத்தனையும் சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கிறது. இதனால் மன அமைதி, ஆரோக்கியம், ஆயுள் அதிகரிக்கிறது. இந்த பயிற்சியை மேற்கொள்ள எந்த விதமான செலவும் செய்யத் தேவையில்லை. மேலும் உபகரணங்கள் எதுவும் தேவை இல்லை, எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
தினமும் தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொண்டால் தீராத தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. மூக்கடைப்பு, மார்புச்சளி ஆகிய பிரச்சனைகள் தீரும். இதயத்திற்கு வலு சேர்ப்பதால் மார்புவலி குறையும். கண் பார்வை குறைபாடு, கேட்கும் திறன் குறைவது போன்ற பிரச்சனைகளும் நீங்கும். குதிகால் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகிய வலிகள் நீங்க இந்த பயிற்சி நல்ல ஒரு பலனைக் கொடுக்கும்.
மேலும் ஜீரண சக்தி அதிகரிப்பதால் நீரிழிவு நோய் குறையும். ஆக மொத்தத்தில் உச்சி முதல் பாதம் வரை இருக்கும் அதனை வியாதிகளையும் தீர்க்க கூடிய அற்புத ஆற்றல் இந்த பயிற்சிக்கு உண்டு. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம். முதலில் குறைந்த நேரத்தில் இருந்து ஆரம்பித்து, பிறகு படிப்படியாக நேரத்தையும், சுற்றுக்களையும் கூட்டிக் கொள்ளலாம். ஆரோக்கியம் காக்கும் இந்த எட்டு நடைபயிற்சியை அனைவரும் செய்து பயன் பெறலாமே!