Advertisement

தலைவலியே வராமல் இருக்க இந்த டீயை குடியுங்கள்! 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றில் இவ்வளவு நன்மைகள் இருக்குன்னு இதுநாள் வரை தெரியாமல் போச்சே!

தலைவலியே வராமல் இருக்க இந்த டீயை குடியுங்கள்! 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றில் இவ்வளவு நன்மைகள் இருக்குன்னு இதுநாள் வரை தெரியாமல் போச்சே!

உலகம் முழுவதும் சூடாக அருந்தும் பானங்களில் முதன்மை பங்கு வகிக்கிறது ‘தேனீர்’ தான் தெரியுமா? சாதாரண சிறு கடைகள் முதல் மிகப்பெரிய ரெஸ்டாரன்ட்கள் வரை அத்தனை இடங்களிலும் இந்த தேநீர் என்னும் சுவை மிகுந்த பானம் கிடைக்கப் பெறுகின்றது. உலகின் பெரும்பாலான பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தேநீரை அதிகமாக தயாரித்து விரும்பி அருந்தி வருகிறார்கள். அத்தகைய தேனீர் நிறைய வகைகளை கொண்டுள்ளது.

tea-making2

அதில் க்ரீன் டீ, பிளாக் டீ, ப்ளூ டீ, லெமன் டீ, இஞ்சி டீ போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இவைகளில் லெமன் டீ என்பது க்ரீன் டீயை விட பன்மடங்கு நன்மைகளை தரக் கூடியதாக இருக்கின்றது. ஐந்தே நிமிடத்தில் லெமன் டீ போடுவது எப்படி? அது எந்தெந்த வகைகளில் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது? என்பதையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

‘லெமன் டீ’ தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் – ரெண்டு கப்

டீ தூள் – அரை ஸ்பூன்

சர்க்கரை அல்லது தேன் – ரெண்டு டீஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – இரண்டு டீஸ்பூன்

lemon-tea1

‘லெமன் டீ’ செய்முறை விளக்கம்:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பேர் சாப்பிட வேண்டுமென்றால் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பேருக்கு தயாரிக்கிறீர்களோ! அதை பொறுத்து தண்ணீரை கூட்டிக் கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் அளவிற்கு உங்களிடம் இருக்கும் டீ தூள் எதுவாக இருந்தாலும் அதை போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும் சமயத்தில் உங்களிடம் கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு போன்றவை இருந்தால் அதனை சேர்த்து கரைய விடுங்கள். அதன் பிறகு இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி பருக வேண்டியது தான்


அப்படி எதுவும் இல்லை என்றால் மேற்கூறியபடி சர்க்கரை அல்லது தேன் கலந்து கொள்ளலாம். சர்க்கரை அல்லது தேன் கலந்து கொள்ளும் பொழுது தண்ணீர் கொதித்ததும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பின்னர் சர்க்கரை அல்லது தேன் கலந்து அடுப்பை அணைத்து விடலாம். அதன் பிறகு வடிகட்டி அப்படியே சூடாக குடிக்க வேண்டியது தான். அதில் இஞ்சி சாரு கொஞ்சமும், ஒன்றிரண்டு புதினா இலைகளையும் போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்.

lemon-tea

லெமன் டீயில் இருக்கும் நன்மைகள்:

நாம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை சாப்பிட்டு இருந்தாலும், பிரியாணி போன்ற அதிக மசாலா பொருட்களை சேர்த்து உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலும், வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு கப் லெமன் டீ குடித்தால் தடை இல்லாமல் எளிதில் செரிமானம் ஆகிவிடும். செரிமான பிரச்சனைகளை தீர்க்க லெமன் டீ பெரிய அளவில் உதவி புரிகிறது. உடல் எடையை குறைப்பதிலும், சீராக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

sad-crying4

அதிகம் டென்ஷன் தரும் வேலைகளில் உள்ளவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற ஒரு கப் லெமன் டீ அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். லெமன் டீயில் நரம்பு மண்டலங்கள் சாந்தமடைய செய்யும் ஆற்றல் உள்ளது. மேலும் இது மூளை நரம்புகளையும் வலுவாக்கி, சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. இதனால் எப்பொழுதும் உற்சாகத்துடன் காணப்படலாம். தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் முதலில் ஒரு கப் டீ பருகினால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

sugar control

இதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் லெமன் டீ சிறந்த தேர்வாக அமைந்திருக்கிறது. நெஞ்சு வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதில் நிவாரணம் பெற உதவுகிறது. மேலும் இன்சுலின் குறைவு ஏற்படாமல் தடுப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து எப்பொழுதும் நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையாகவும் வைத்துக் கொள்ளும், எனவே தினமும் நம் உணவில் லெமன் டீ யை சேர்த்து வந்தால் நலம் பெறலாம்.