Advertisement

வெயில் காலத்திலும் உங்களது உடம்பை எப்போதுமே ஜில்லுன்னு வைத்துக்கொள்ள 1 டம்ளர் இந்த ஜூஸ் குடிச்சா போதும். உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பைத் தரும்.

வெயில் காலத்திலும் உங்களது உடம்பை எப்போதுமே ஜில்லுன்னு வைத்துக்கொள்ள 1 டம்ளர் இந்த ஜூஸ் குடிச்சா போதும். உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பைத் தரும்.

வரப்போகுது வெயில் காலம். நம்முடைய உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் தான் செய்யும் வேலையில் பின்னடைவு ஏற்படாது. இல்லை என்றால் உடல் சோர்வடைந்து, செய்யும் வேலையில் பின்னடைவு ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் வரும். ஆரோக்கியத்திலும் குறைபாடு ஏற்படும். இதற்கு சுலபமான முறையில் நம்முடைய வீட்டிலேயே எந்த ஜூஸை குடித்தால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

milk1

இந்த ஜூஸ் செய்வதற்கு முன்பாக நாம் எதையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய டம்ளர் அளவு பாலை நன்றாக காய்ச்சி வடிகட்டி ஒரு கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்தபடியாக 5 பாதாம் கொட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் சப்ஜா விதையை தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

சப்ஜா விதைகள் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய தன்மை இதற்கு அதிகமாகவே உள்ளது. இதை வெயில் காலங்களில் நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை இருக்காது. உடல் சூட்டினால் பாதிப்புகள் நமக்கு வரவே வராது.

froot

உங்களுக்கு எந்த பழம் மிகவும் பிடிக்குமோ ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை பழம், வெள்ளரிப் பழம், தர்பூசணி இப்படி எந்த பழங்களை வேண்டுமென்றாலும் இந்த ஜூஸ் போட பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதாவது ஒரு பழத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பழங்களை தேவையான அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஜூஸ் எப்படி செய்வது என்பதை பார்த்து விடலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் ஜில்லுனு இருக்கும் பாலை எடுத்து 300 ml அளவு மிக்ஸியில் ஊற்றி விட வேண்டும். பாலுடன் நறுக்கி வைத்திருக்கும் 1 ஆப்பிள் பழங்களை மிக்ஸியில் போட வேண்டும். அடுத்தபடியாக முந்திரி பருப்பு, ஊற வைத்திருக்கும் பாதாம், ஏலக்காய் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியை ஒரு நிமிடம் வரை நன்றாக ஓட விடுங்கள்.

apple

உள்ளே சேர்த்து இருக்கும் பொருட்கள் எல்லாம் நைசாக அறைய வேண்டும். நாம் எடுத்திருக்கும் இந்த பாலுக்கு 2 கிளாஸ் அளவு ஜூஸ் தாராளமாகக் கிடைக்கும். இதை டம்ளரில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த ஒரு டம்ளர் ஜூஸ் க்கு ஒரு டேபிள்ஸ்பூன் வரை சப்ஜி விதைகளை சேர்த்து கலந்து விடுங்கள்.

milk-shake1

இந்த ஜூஸுக்கு மேலே துருவிய பாதாம் பிஸ்தா முந்திரி குங்குமப்பூ இப்படி உங்களுக்கு பிடித்த முறையில் அலங்காரம் செய்து தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகளை சேர்த்து பரிமாறி பாருங்கள். உடலுக்கு ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியை தரக்கூடிய சுலபமான ஜூஸ்களில் இதுவும் ஒன்று. வெயில் காலத்தில் தவறாமல் இதை குடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.