Advertisement

வாழ்நாள் முழுவதும் நீங்கள் இளமையாக இருக்க இந்த 1 பழம் போதுமே! இந்த பழத்தை வைத்து என்ன செய்யறது? நீங்களும் இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா?

வாழ்நாள் முழுவதும் நீங்கள் இளமையாக இருக்க இந்த 1 பழம் போதுமே! இந்த பழத்தை வைத்து என்ன செய்யறது? நீங்களும் இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா?

எத்தனை வயதைக் கடந்தாலும், நம்முடைய மனதை இளமையாக வைத்துக் கொண்டால் போதும். 60 வயதிலும் கூட 20 போல உற்சாகமாக, அழகாக இருக்கலாம். உங்களுடைய முகம் எத்தனை வயதைக் கடந்தாலும், சுருக்கம் விழாமல் இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால், இந்த குறிப்பு உங்களுக்காக மட்டும்தான். இதற்காக அதிகப்படியான காசை செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. முழுக்க முழுக்க இயற்கையாக நமக்குக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சுலபமான முறையில் நம்முடைய அழகை, நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? இப்போதே பார்க்கலாம் வாங்க.

face5

உங்களை அழகாக வைத்துக் கொள்ள, நாம் இந்த ரிமெடியில் பயன்படுத்தப் போகும் பொருள் வாழைப்பழம் என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். அந்த வாழைப்பழத்துடன் என்னென்ன பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம்? இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பொருளை கூட மிஸ் பண்ணாம, வாழைப்பழத்துடன் சேர்க்கணும். அப்போது தான் முகம் சுருக்கம் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு இளமையாக தோற்றத்தைக் கொடுக்கும்.

முதலில் ஒரு சிறிய பௌவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், சிறிய வாழை பழமாக இருந்தால் ஒரு வாழைப்பழத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெரியதாக இருந்தால் அதை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பழம் நன்றாக படித்திருக்க வேண்டும். உங்களுடைய முகத்தில் கழுத்தில் போடும் அளவிற்கு பேஸ்ட் தயார் செய்து கொள்ள வேண்டும்.

வாழைப்பழம் பாதி அளவு, தேன் – 1 ஸ்பூன், Castor oil என்று சொல்லப்படும் ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) – 1 ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன் இந்த பொருட்கள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும். சிறிய கிண்ணத்தில் வாழைப்பழத்தை முதலில் நன்றாக ஸ்பூன் வைத்து நசுக்கி கொள்ள வேண்டும். வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்த பின்பு, அதில் தேன், ஆமணக்கு எண்ணெய், அலோ வேரா ஜெல் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.

இப்போது இதை உங்களுடைய முகத்தில், உங்கள் கையாலேயே எடுத்து லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து தரவேண்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதும். 1 மணி நேரம் வரை இந்த பேக் உங்களுடைய முகத்திலேயே இருக்கட்டும். ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும். சோப்பு போட்டு கழுவ வேண்டாம். சாதாரணமாக முதலில் கழுவி விட்டு, இரண்டு, மூன்று மணி நேரங்கள் கழித்த பின்பு சோப்பை போட்டுக்கலாம். வாரம் 2 நாட்கள் இப்படி செய்தால் கூட போதும். உங்களுடைய தோல் சுருங்காது. பல பலவென தோற்றத்தைக் கொடுக்கும்.

face7

வயது முதிர்ந்த தோற்றம் தள்ளிப் போக வேண்டுமென்றால், இளமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க! நிச்சயமாக வித்தியாசம் தெரியும். அலோ வேரா ஜெல் இயற்கையாக கிடைத்தால் செடியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அப்படி இயற்கையாக கிடைக்காதவர்கள் கடையில் விற்கும் ஜெல் பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு இல்லை. தொடர்ந்து இந்த ரெசிபியை முயற்சி செய்து வந்துகொண்டே இருந்தால் மட்டுமே நல்ல பலனை உங்களால் பெற முடியும். விட்டுவிட்டு செய்தால் சரியான பலனை கொடுக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.