1 ஸ்பூன் இந்தப் பொடியை தண்ணீரில் போட்டு கலக்கி குடித்து விடுங்கள். ஆயுசுக்கும் தலைமுடி உதிர்வு வரவே வராது. நீங்களும் இரும்பு மனிதராக மாறி விடலாம்.
இரும்பு சத்து உடம்பில் அதிகமாக இருந்தால் நாம் இரும்பு மனிதராக மாறி விடலாம். இதற்காக தினமும் 1/4 கிலோ அளவு இரும்பு சாப்பிட முடியுமா என்ன? இரும்பு சத்து அதிகமாக இருக்கும், மலிவாக கிடைக்கும் இந்த பொருளைதான் சாப்பிட வேண்டும். அது எந்த பொருள்? நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தப் பொருளை மதிப்பதே கூட கிடையாது. அலட்சியமாக நினைப்பது. ஏனென்றால் இதனுடைய விலை மிகவும் குறைவு. மனிதர்களுக்குள் இருக்கும் இயல்பு இதுதானே! விலை மலிவான பொருட்களில் சத்துக்குறைவு. விலை அதிகமாக இருக்கும் பொருட்களில் சத்து அதிகம் என்று நாமாகவே நினைத்துக் கொள்வது.
இந்த நினைப்பு மிகவும் தவறான ஒன்று. நம்முடைய கிராமபுறங்களில் அந்த காலத்தில் சில வீடுகளில் வீட்டிற்கு பின்னால், சில வீடுகளில் வீட்டிற்கு முன்னால் இந்த மரம் கட்டாயம் வளர்க்கப்படும். அந்த மரம் தான் முருங்கை மரம். காலப்போக்கில் வீட்டில் இந்த மரம் வளர்க்கும் வழக்கம் குறைந்துவிட்டது. காலப்போக்கில் அதை சாப்பிடுவதையும் நாம் மறந்துவிட்டோம். தொடர்ந்து இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தாலே நாம் இரும்பு மனிதராக மாறி விடலாம். முடி உதிர்வு பிரச்சினை ஆயுசுக்குமே வரவே வராது.
சரிங்க! தினமும் முருங்கைக் கீரையை வாங்கி அதை சுத்தம் செய்து பொரியல் செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடுவதற்கு சிரமம். இதை மருந்தாக நினைத்தாவது 1 ஸ்பூன் சாப்பிடலாமே. அது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோமா? பெரிய கட்டு அளவில் 2 கட்டு முருங்கைக்கீரையை வாங்கி காம்பு இல்லாமல் வெறும் கீரைகளை மட்டும் தனியாக, உருவி வைத்துக்கொள்ள வேண்டும். பூச்சிமருந்து அடிக்காத கீரையாக இருக்க வேண்டும். பூச்சி அரிக்காத, மரத்திலிருந்து உடைக்கப்பட்ட கீரையாக இருக்க வேண்டும்.
சுத்தம் செய்த இந்தக்கீரையை அகலமான ஒரு வெள்ளைத் துணி அல்லது அகலமான ஒரு தட்டில் பரவலாக கொட்டி வீட்டுக்குள்ளேயே காற்றில் ஆற வைத்துவிடுங்கள். இயற்கையான காற்றில் தான் உலரவைக்க வேண்டும். ஐந்து நாட்கள் இதை அப்படியே நிழலில் உலர விட வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறை உங்கள் கையைக் கொண்டு லேசாக அப்படியே கிளறி விடுங்கள். இந்தக் கீரையில் தண்ணீர் படக்கூடாது. 5 நாட்கள் இந்த முருங்கைக்கீரையை நன்றாக காய்ந்த பிறகு கையில் எடுத்தாலே மொறுமொறுவென உடையும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து, சல்லடையில் சலித்து நைஸ் பவுடராக தயார் பண்ணி வைத்துக் கொள்ளலாம். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் 3 மாதங்கள் வரைகூட இந்த பவுடர் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி 1 ஸ்பூன் இந்தப் பவுடரை, 1 டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக மிக நல்லது.
முடிந்தால் ஒரு ஸ்பூன் இந்த பவுடரை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு, தண்ணீர் குடித்து விடுங்கள். அது உங்களுடைய இஷ்டம்தான். இப்படி மட்டும் செய்து பாருங்கள். எண்ணி 90 நாட்களில் உங்கள் உடல் ரீதியான அத்தனை பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
ஆனால் இந்த முருங்கை கீரையை வாங்கி உருவி சுத்தம் செய்து தண்ணீரில் மட்டும் கழுவி விடக்கூடாது. அப்படியேதான் உலர வைத்து அரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. சத்து மிகுந்த பொருட்களை உதாசீனப்படுத்தாதீர்கள். இதெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு சிரமம் இருந்தால், சுத்தமாக கடைகளில் முருங்கைக்கீரை பொடியாக விற்கின்றது. அதை வாங்கி கூட சாப்பிடலாம்.