அடேங்கப்பா? தினமும் ஒரே 1 டம்ளர் இந்த பாலை குடித்தால் இத்தனை நன்மையா! உடல் எடை குறைய, சருமம் பளபளப்பாக, முடி வளர்ச்சி அதிகரிக்க, ரத்த ஓட்டம் சீராக! நம்பவே முடியல.
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள உங்களுக்கு நேரமே இல்லை. நிறைய சத்து மிகுந்த பொருட்களை வாங்கி சாப்பிட கையில் அளவுக்கு அதிகமாக பணமும் இல்லை. என்ன செய்வது? இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் இந்த 1 டம்ளர் பாலை மிக மிக எளிமையான முறையில் தயார் செய்து மிக மிக மலிவான பட்ஜெட்டில் உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்ளலாம். நாம் குடிக்க வேண்டிய அந்த ஒரு டம்ளர் பால் எந்த பால், என்னென்ன அளவுகளில் எப்படி, எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்று இப்போதே பார்க்கலாம் வாங்க.
ரொம்ப பில்டப் பண்ணியாச்சு. அது என்ன பால் இப்பவே பார்த்திடலாம். நம்முடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, நமக்கு உதவப் போவது தேங்காய்ப் பால். இந்த தேங்காய்ப்பாலை முறைப்படி எப்படி குடிப்பது. இதற்கு 40 கிராம் தேங்காய் மட்டுமே தேவை. அதாவது இரண்டு சிறிய தேங்காய் பத்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த தேங்காய் பால் தயாரிக்க 200ml அளவு சுத்தமான தண்ணீர் தேவைப்படும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டுக் கொண்டாலும் சரி அல்லது சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டுக் கொண்டாலும் சரி. 200 ml தண்ணீரிலிருந்து முதலில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, தேங்காயை அரைத்து பாலை பிழிந்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல் இரண்டாவது முறை தேங்காயில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும், மூன்றாவது முறை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். மொத்தமாக 200ml தண்ணீரை மூன்று பாகங்களாக பிரித்து, 40 கிராம் அளவு தேங்காயில் ஊற்றி அரைத்து தேங்காய் பாலை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வாசத்திற்கு இதில் ஏலக்காய் தூலை மட்டும் 1/2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
மற்றபடி நாட்டு சர்க்கரை, பனைவெல்லம் எதையும் சேர்க்க கூடாது. அப்படியே காலையில் வெறும் வயிற்றில் இந்த 1 டம்ளர் தேங்காய் பாலை குடித்து விட்டால் போதும். சிலபேருக்கு சந்தேகம் வரலாம். தேங்காய் சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகத்தனே செய்யும். எப்படி குறையும் என்று! கெட்ட கொழுப்பை நம் உடலில் இருந்து வெளியேற்ற கூடிய சக்தி இந்த தேங்காய்க்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆனால் அளவுக்கு அதிகமாக நிறைய தேங்காயை போட்டு அதிகப்படியாக பாலை எடுத்து திக்காக குடிக்கவே கூடாது. இது தேவையற்ற உடல் உபாதைகளை உங்களுக்கு தந்துவிடும். மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருப்பவர்கள். தொடர்ந்து 48 நாட்கள் தாராளமாக குடிக்கலாம். இந்த ஒரு டம்ளர் தேங்காய் பால் ஆனது உங்களுடைய உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
உடம்பில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பு வெளியேற்றப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக பட்டு, முடி உதிர்வு குறைக்கப்பட்டு, புதிய முடிகள் வளர்ச்சி அடைந்து, வயிற்றுப்புண் வாய்ப்புண் குடல்புண் இவைகள் எல்லாம் சீக்கிரமே குணமாகி அல்சர் நீங்கி, உங்களை ஆரோக்கியமாக வைக்க இந்த ஒரு டம்ளர் பால் மிக மிக உதவியாக இருக்கும்.
இதோடு சேர்த்து முடி உதிராமல் இருக்க தினமும் 4 பாதாம், இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிட வேண்டும். கருப்பு உலர் திராட்சை சிறிதளவு இதனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு 48 நாட்களில் குறைவதை கண் கூடாகக் காணலாம். உடலின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க!