Advertisement

தினமும் காலையில் 1 டம்ளர் இந்த பாலை குடித்தாலே போதும். ஆயுசுக்கும் மருந்து மாத்திரையே சாப்பிட வேண்டாம்.

தினமும் காலையில் 1 டம்ளர் இந்த பாலை குடித்தாலே போதும். ஆயுசுக்கும் மருந்து மாத்திரையே சாப்பிட வேண்டாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற நம்முடைய முன்னோர்களின் கூற்று எவ்வளவு பெரிய உண்மை! இன்றைய சூழ்நிலையில் மருந்து மாத்திரை சாப்பிடாமல் உயிர் வாழ்வது என்பதே கஷ்டம் என்ற அளவிற்கு நம்மில் பலபேர் இருக்கின்றோம். தினசரி ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருகின்றோமோ, இல்லையோ, நேரம் தவறாமல் வேளை தவறாமல் மருந்து மாத்திரையை சாப்பிட்டு வருகின்றோம். இதன் மூலம் பக்கவிளைவுகள் அதிகரித்து, வாழ்க்கையில் ஆயுள் குறைகின்றதே தவிர, ஆரோக்கியம் உயர்ந்த பாடாக இல்லை. காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம். நீங்கள் நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் தினமும் காலையில் இந்த ஒரு டம்ளர் பாலை குடித்தாலே போதும்.

Kambu bnefits in Tamil

அது என்ன பால்? உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?  நம்முடைய உணவு பட்டியலில் காணாமல்போன கம்பை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். சிறுதானியங்களில் நம்முடைய உடலுக்கு அதிகப்படியான சக்தியைக் கொடுக்கும் இந்த கம்பை நாம் மறந்து விட்டோமே! இந்த கம்பை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை ஏற்படாது. உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இந்த கம்பை வைத்து கம்பு பால் எப்படி எடுப்பது என்ற அருமையான ஒரு, பானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கைப்பிடி அளவு கம்பு போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீரை ஊற்றி 2 முறை நன்றாக கழுவி அந்த தண்ணீரை வடித்துவிட வேண்டும். நாளை காலை நீங்கள் கம்பு பால் தயார் செய்ய வேண்டும் என்றால் இன்று காலையில், கம்பில் தண்ணீரை ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும். இரவு வரை அந்த கம்பு தண்ணீரிலேயே ஊறட்டும்.

kambi-milk1

இரவு மீண்டும் இரண்டு முறை ஊறிய தண்ணீரை கழுவி, நீரை வடித்து விட்டு, அதே பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு, கம்பை மூடி வைத்துவிட்டால், மறுநாள் காலை கம்பு, முளைத்து பால் எடுப்பதற்கு தயாராக இருக்கும். இந்த முளைத்த கம்பை வைத்து எப்படி பால் எடுப்பது. (நாள் முழுவதும் தண்ணீரில் ஊறிய கம்பை, தண்ணீரை வடிகட்டிவிட்டு பாத்திரத்தில் மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.)

1 சிறிய கப் அளவு முளைக்கட்டிய கம்பை எடுத்துக் கொண்டால், அதே சிறிய கப் அளவு தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முளைகட்டிய கம்பு, 1/2 ஸ்பூன் சுக்கு தூள் சேர்த்து தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இதை வடிகட்டி பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதே திப்பியை இரண்டாவது ஒருமுறை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து மீண்டும் பால் எடுத்துக் கொள்ளலாம். (தேங்காய்ப்பால் எடுப்போம் அல்லவா அதேபோல்தான்.)

coconut-milk1

இந்த கம்பு பாலை ரொம்பவும் திக்காக எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் குடித்தால் வாயில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்திற்கு பாலின் நீர்ம தன்மை இருந்தால் போதும். வடிகட்டிய இந்தப் கம்பு பாலில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையை சேர்த்து விடவேண்டும். காலையில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த கம்பு பாலைக் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் ஆயுசுக்கும் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டாம். மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.

sukku

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த பானத்தை எல்லோரும் குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குறிப்பாக வளர்ந்து வரும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்க இந்தப் கம்பு பால் அவசியம் தேவை.

kambi-milk2

பழக்கம் இல்லாமல் நீங்கள் இதை முதல் முறை குடிக்கும் போது, கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக இதை உங்களுடைய அன்றாட பழக்கத்திற்கு கொண்டுவரும்போது, உங்களாலேயே ஆரோக்கியத்தில் நல்ல வித்தியாசத்தை உணரமுடியும். ட்ரை பண்ணி பாருங்க.