சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை 2 நிமிடத்தில் நீக்க வீட்டிலிருக்கும் இந்த 1 பழம் போதுமே!
சரும அழகை பேணி காப்பது என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த செயலாகும். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கினாலே முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் ஜொலிக்க துவங்கும். வெளியிடங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இதனால் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்பட்டு முக அழகை சீர்குலைக்கிறது.
இவற்றிலிருந்து சுலபமாக வெளியேற தினமும் இந்த ஒரு பழம் கொண்டு இப்படி செய்தால் போதும். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படிப்போம். இந்த பழம் எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக காணப்படும் ஒரு எளிமையான பழ வகை தான். இப்பழம் அதிகம் விட்டமின்களை கொண்டுள்ளது. மலசிக்கலுக்கு பெருமளவு உதவி செய்யும்.
தினமும் இந்த பழத்தை சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி உடல் தூய்மை அடையும். அப்படி என்ன அந்தப் பழம்? வாழைப்பழம் தாங்க அது! எல்லோருடைய வீட்டிலும் எளிதாக காணப்படும் வாழைப்பழத்தைக் கொண்டு முகத்தில் இருக்கும் இறந்த செல்களை எப்படி எளிமையாக நீக்குவது? என்பது தான் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ஒரு வாழை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு தண்ணீர் விடாமல் அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய முகத்தை சுத்தமாக தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பௌலில் மசித்த வாழைப்பழத்தில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு டீஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றை கலந்து நன்கு பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை முகத்தில் மாஸ்க் போல எல்லா இடங்களிலும் தடவிக் கொள்ள வேண்டும். முகம் முதல் கழுத்து பகுதி வரை தடவி கொள்ளுங்கள். கழுத்துக்களிலும் இறந்த செல்கள் மூலம் பருக்கள் அல்லது மருக்களாக மாறுவதை இந்த பேக் தடுக்கும். ஒரு பதினைந்து நிமிடம் வரை நன்கு உலர விட்டு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு சருமத்தை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும்.
இது போல வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் எப்போதுமே உங்களுடைய சருமம் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் முதல் முறை செய்யும் பொழுது உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி புதிய செல்கள் புத்துணர்வு பெறச் செய்யும். முகம் பழைய பொலிவை மீண்டும் அடையும். உங்களை நீங்களே கண்ணாடியின் முன்பு நின்று பார்ப்பதற்கு வியந்து போவீர்கள்.