Advertisement

உங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே! வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

உங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே! வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

நிறைய பேருக்கு சாப்பிட்ட உடனேயே வயிறு உப்புசம் ஆகிவிடும். அதாவது உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒட்டி இருக்கும் வயிறு, உணவு சாப்பிட்ட பின்பு பெரியதாகிவிடும். இதற்கு நாம் எல்லோரும் வயிறு உப்புசம் என்றுதான் சொல்லுவோம். சிலபேருக்கு வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். இந்த இரண்டு பிரச்சனையும் உள்ளவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது. என்ன செய்வது? தொப்பையால், உடல் எடையால், வாயுத் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருபவர்களுக்காக இந்த குறிப்பு. உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருளை வைத்து இந்த கசாயத்தை தயார் செய்து இப்படி குடித்து பாருங்கள். 15 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

thoppai

இந்த கசாயம் வைக்க வெறும் 2 பொருள் போதும். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்தான் இது ‘இஞ்சி பூண்டு’. இஞ்சி பூண்டு கஷாயத்தை சரியான முறையில் எப்படி குடித்தால் வாயுத் தொல்லை, உப்புசம், கெட்ட கொழுப்பு குறையும் என்ற இந்த ரகசியத்தை தெரிந்து கொள்வோம்.

பூண்டு 2 பல் தோல் உரித்தது, சிறிய துண்டு இஞ்சி தோல் சீவியது, பூண்டுப்பல் அளவு இஞ்சித்துண்டை எடுத்துக்கொண்டாலே போதும். இந்த இரண்டு பொருளையும் நைசாக துறவியும் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் சிறிய உரலில் போட்டு நசுக்கிவிட்டு கஷாயம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

thoppai2

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நிறைய தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் நசுக்கிய இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, 5 லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க விட வேண்டும். இதை அப்படியே வடிகட்டி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். எப்போது குடிக்க வேண்டும்?

மூன்று வேளையும் உணவு சாப்பிட்ட பின்பு 1/2 மணி நேரம் கழித்து, இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதாக இருந்தாலும் 1 டம்ளர் அளவு இந்த தண்ணீரை தாராளமாக குடிக்கலாம். தவறு கிடையாது. சரியான அளவில் உணவு உட்கொண்டு, சரியான உடற்பயிற்சிகளை எடுத்தும், உடல் எடை குறைக்க முடியவில்லை எனும் பட்சத்தில் இந்த தண்ணீரைக் குடித்தால் நிச்சயமாக வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

poondu

உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வெறும் இந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் தொப்பையும், தேவையற்ற கொழுப்பும் வயிறு உப்புசம் குறைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது. சில பேருக்கு வெறும் சுடுதண்ணி குடித்து வந்தாலே உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும். சில பேர் சரியான முறையில் டயட்டை மெயின்டெயின் செய்து, சரியான முறையில் எக்சர்சைஸ் செய்து வந்தாலும் கூட, உடல் எடை குறையாது. வயிறு உப்புசம் ஆகிக்கொண்டே இருக்கும். தொப்பை பெரிதாகிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன், உடல் பயிற்சியோடு ஒன்று சேர்த்து இந்த கஷாயத்தையும் குடித்து வந்தால் நல்ல பலனை விரைவாக பெறலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.