Advertisement

அரிப்பை உண்டாக்கும் சேற்றுப் புண்ணை அலட்சியம் செய்தால் ஆபத்து! வீட்டில் இருக்கும் 2 பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி?

அரிப்பை உண்டாக்கும் சேற்றுப் புண்ணை அலட்சியம் செய்தால் ஆபத்து! வீட்டில் இருக்கும் 2 பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி?

மழைக் காலங்களில் வரக்கூடிய பிரச்சனைகளில், ‘சேற்றுப்புண்’ என்பதும் ஒன்றாகும். இது மழைக்காலங்களில் தேங்கி நிற்கக் கூடிய தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் வரக்கூடியது. சேற்றுப் புண்ணை சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விட்டால் அது மேலும் அதிகமாகி வலியை உண்டாக்கி விடும். இதனால் நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வந்தால் விரைவில் ஆறவே செய்யாது என்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரே நாளில் சேற்றுப்புண் பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண முடியும். அதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

sethu-pun

மழைக் காலம் வந்து விட்டாலே சாலைகளில் தண்ணீர் ஆங்காங்கே தங்கி சேரும், சகதியுமாக ஆகி விடும். அதிக நாட்கள் அப்படியே தங்கி இருக்கும் அந்த சேற்றில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை கிருமிகள் உருவாகிவிடும். அதில் கால் வைத்து நடக்கும் பொழுது கால் இடுக்குகளில் செல்லும் இக்கிருமிகள் சேற்றுப்புண்ணை உருவாக்கி விடுகிறது. மேலும் செருப்பு போட்டு அழுத்தம் கொடுத்து மழை தண்ணீரில் நடக்கும் பொழுது இக்கிருமிகள் புகுந்து கால் இடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மழை நீரில் அதிக நேரம் கால்களை வைத்து நடப்பதும், ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும் சேற்றுப்புண் வர காரணமாக அமைகிறது. விரல் இடுக்குகளில் இருக்கும் பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மற்ற கால் விரல்களுக்கும் பரவி அதிகமாகிவிடும். இதனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது.

sethu-pun1

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொடிய புற்று நோயை கூட குணமாக்க கூடிய இந்த மஞ்சள், சேற்றுப்புண் மிக துரிதமாக குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. கலப்படம் இல்லாத சுத்தமான மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு கெட்டியாக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை அப்படியே எடுத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் தடவி வர ஒரே நாளில் நல்ல நிவாரணத்தை காண முடியும். இரவில் தடவிக் கொண்டு படுத்தால் காலையில் எழுந்ததும் அரிப்பு நீங்கி விட்டிருக்கும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இதனை தடவி வர முழுமையாக சேற்றுப்புண் குணமடையும்.

விளக்கெண்ணெயில் அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது. மேலும் எந்த வகையான புண்ணையும் விரைவில் ஆற்றக்கூடிய சக்தியும் இருப்பதால் மஞ்சளுடன், விளக்கெண்ணை சேரும் பொழுது சேற்றுப்புண் அதி விரைவாகவே குணமடைகிறது. மேலும் மஞ்சளுடன் மருதாணி இலை, வேப்பிலை போன்ற இலைகளை அரைத்து தடவினாலும் நல்ல பலன் காணலாம்.

manjal-caster-oil

சேற்றுப் புண்ணிற்கு மருந்து தடவும் முன்பு கால்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியமாகும். சேற்றுப்புண் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் குழைத்து தடவி கொண்டு குளிக்க செல்வது நல்லது. உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை சிறுது நேரம் ஊற வைத்து பின்னர் சுத்தமான துணியால் துடைத்து எடுத்த பின் மருந்து போடுவது மிக விரைவாக குணமடைய செய்யும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.