எண்ணிப் பார்க்கிற அளவுக்கு தான் உங்க தலையில முடி இருக்கா? அப்படின்னா வீட்டில் இருக்கும் இந்த 2 பொருளை வைத்து பொடுகு முழுவதும் ஒரே வாரத்தில் நீக்கி அடர்த்தியான முடியை வளர செய்வோமா?
இன்று இருக்கும் நவீன யுகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதர்கள் ஆளாகியுள்ளனர். இதனால் முடி கொட்டும் பிரச்சனை பெரும்பாலானோருக்கு இன்று காணப்படுகிறது. அதிவேகமாக முடியை இழந்து கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் கூட எச்சரிக்கையாக இல்லாவிட்டால்! மண்டையில் முடியே இல்லாமல், தோற்றத்திலும் அழகிழந்து காணப்படுவீர்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முடி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தலை முடியின் அடர்த்தி தான், முக அழகை மெருகேற்றுகிறது. எனவே அடர்த்தியான கூந்தலை ஒரே வாரத்தில் பெற நம் வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை எப்படி பயன்படுத்தலாம்? என்பது தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
தலைமுடியின் பாதுகாப்பிற்கும் வறட்சியை நீக்க கூடிய வகையிலும், இந்த இரண்டு பொருட்கள் உதவி செய்கிறது. இந்த இரண்டு பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கக் கூடிய சாதாரண பொருட்கள் தான். விலை கொடுத்து வெளியில் கடையில் வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒன்று வெந்தயம்! வெந்தயத்தை முந்தைய நாள் இரவே 2 டீஸ்பூன் அளவிற்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே போல சுத்தமான தயிர் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு நன்கு புளிக்க வைக்க வேண்டும். புளித்த தயிர் தான் தலையில் இருக்கும் பொடுகை எளிமையாக நீக்கும் ஆற்றல் கொண்டது. எனவே தயிரை எந்த அளவிற்கு புளிக்க விட முடியுமோ அந்த அளவிற்கு புளிக்க வைத்து கொள்ளுங்கள். பின்னர் காலையில் எழுந்ததும் ஊற வைத்த வெந்தயத்தை, இந்த தயிருடன் சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை பேஸ்ட் போல் தலை முடியின் வேர்க்கால்களில் இருந்து அத்தனை பகுதிகளுக்கும் சென்று அடையுமாறு நன்கு தடவி விட வேண்டும். அதற்கு முன்னரே உங்களுடைய தலையில் எண்ணெய் தடவி ஒரு முறை சீப்பினால் வாரி விட்டுக் கொள்ளுங்கள். வெந்தயத்துடன் தயிர் சேர்த்தால் இன்னும் உடல் குளிர்ச்சி அடையும் என்பதால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
வெந்தயம், தயிர் இரண்டுமே சேரும் பொழுது தலை குளிர்ச்சி அடைகிறது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்கள் தூண்டி விடப்படுகிறது. இழந்த முடியும் மீண்டும் இதன் மூலம் முளைக்கத் துவங்கும். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நம்முடைய முடி மொத்தமும் போய் வழுக்கை தலை ஆகி விடுவோம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் அளவிற்கு இந்த கலவையை தலையில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
தயிர் சேர்த்து உள்ளதால் வறட்சி நீங்கி பட்டுப் போல உங்களுடைய கூந்தல் மின்ன துவங்கும். வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் தலை முடியின் வேர்களுக்கு நன்கு ஊட்டசத்தைக் கொடுத்து உதிர்ந்த இடத்திலிருந்து மீண்டும் முடி புதியதாக முளைக்கத் துவங்கும். இதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களுடைய தலை முடியின் அடர்த்தி அதிகரிக்க ஆரம்பிப்பதை நீங்களே உணரலாம். தலைமுடியின் ஆரோக்கியம் என்பது நாம் அதனை பராமரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது. வாரம் இரண்டு முறையாவது கட்டாயம் தலையை நன்கு அலசி குளித்து விட வேண்டும்.