கடையில் வாங்கும் எதுவும் வேண்டாம்! கண்ணாடி போன்ற முக அழகு பெற இந்த 2 பொருளை மட்டும் அரைத்து வைத்துக் கொண்டால் போதுமே!
எல்லோருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அழகு தான் ஒருவருக்கு முதலில் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. மாசு மருவற்ற பொலிவான முகம் பெற அனைவரும் விரும்புவதால் தான் இன்று மார்க்கெட்டுகளில் முக அழகு பொருட்கள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதை தடவிக் கொண்டால் ஒரே நாளில் வெள்ளையாகி விடுவீர்கள் என்று சொன்னால் போதும்! அதையும் நம்பி பெண்களும், ஆண்களும் வயது வித்தியாசமின்றி உடனே வாங்கி பயன்படுத்தி பார்ப்பார்கள்.
அது எப்படி ஒரே நாளில் வெள்ளையாக முடியும்? என்று கூட அவர்கள் யோசிப்பதில்லை. அந்த அளவிற்கு முக அழகு ஒருவருக்குக்கு முக்கியமானதாக இருக்கின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இந்த இரண்டு மூலிகை பொருட்களை நம் வீட்டில் அரைத்து வைத்துக் கொண்டால் போதும்! எப்போது தேவையோ அப்போதெல்லாம் நீங்கள் அழகாக மாறிக் கொள்ளலாம். அது என்ன பொருள்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
இந்த இரண்டு பொருட்களும் மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஒன்று ஜாதிக்காய் எனப்படும் ஒரு வகையான மூலிகை. இன்னொன்று நம் அனைவரும் அறிந்த சந்தனம். ஜாதிக்காய் மற்றும் சந்தனத்தை மட்டும் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் க்ரீம் என்று எல்லா வகையிலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது இயற்கையாகவே எந்த விதமான பக்க விளைவுகள் இல்லாமல் நல்ல ஒரு முகப் பொலிவை நாம் சுலபமாக பெற்று விடலாம்.
ஜாதிக்காய் மூன்று, சந்தனம் ஆறு வில்லைகள் எடுத்துக் கொள்ளுங்கள். தூய சந்தனம் கிடைத்தால் இன்னும் அருமையான பலன்களை கொடுக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை. இதனை நன்கு நுணுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதம் வரை இதனை பயன்படுத்தலாம் அதற்குப் பிறகு இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
ஜாதிக்காய், சந்தன கலவை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் பால் அல்லது பன்னீர் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவிக் கொள்ள வேண்டும். நன்கு உலர விட்டு வெது வெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக நீங்கி முகம் மாசு மரு இல்லாமல் பொலிவடையும். அதிக அழுக்குகள் கொண்ட சருமத்தில் இதை பயன்படுத்தும் பொழுது கட்டாயம் லேசாக எரிச்சல் இருக்கும்.
நீங்கள் திடீரென எங்காவது விசேஷம், விழா என்று செல்லும் பொழுது மூன்று நாட்களுக்கு முன்னர் இதனை செய்து கொள்வது நல்லது. இதனுடன் தயிர் அல்லது பழக்கூழ் சேர்த்து முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் கூடுதல் பலன்களைப் பெறலாம். பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் போன்ற பழங்களை கூழாக செய்து அதனுடன் இந்த கலவையை சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால் முகப் பருக்கள் நீங்கி முகம் கண்ணாடி போல பளபளன்னு நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மின்னும். இதற்காக அதிக பணத்தை கொடுத்து தேவையில்லாத கண்ட கண்ட ரசாயன கலவைகளை பயன்படுத்த தேவையில்லை. இந்த இரண்டு மூலிகைப் பொருட்கள் உங்களிடம் இருந்தாலே போதும் நீங்களும் ஒரு ஸ்டார் தான்.