தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு தொல்லையிலிருந்து 2 மணி நேரத்தில் விடுபட இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளித்தாலே போதும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலையில் இருக்கும் பேன் பொடுகு தொல்லையால் அவதி படுவது இயற்கையான ஒரு விஷயம்தான். எவ்வளவுதான் செயற்கையாக தயாரிக்கும் விலை உயர்ந்த ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்தினாலும், இந்த பேன் தொல்லையும் பொடுகு தொல்லையும், சில பேருக்கு நிரந்தரமாக போகவே போகாது. அப்படியே பொடுகுத் தொல்லை பேன் தொல்லையில் இருந்து விடுபட செயற்கை முறையில் ஏதேனும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும், ஒரு முறை பயன்படுத்தினால் தலையில் இருக்கும் பொடுகு போய்விடும். ஆனால் நிரந்தரமாக போகாது. மீண்டும் அடுத்தவாரம் பேன் தொல்லையும் பொடுகுத் தொல்லையும் திரும்பவும் வர ஆரம்பிக்கும்.
குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லும் பெண் குழந்தைகள் தலையில் நிறைய பேன் பிடித்து இருக்கும். பக்கத்தில் அமரும் மாணவர்களுடைய தலையில் பேன் இருந்தால், அது நம் குழந்தைகளுடைய தலையிலும் ஒட்டிக்கொள்ளும். இது இயல்புதான். இரவு படுத்து உறங்கும் போது நம் குடும்பத்திற்கே இந்த பிரச்சனை ஒட்டிக்கொள்ளும். நாம் இயல்பாக சந்திக்கும் ஒரு பிரச்சனை இது.
இதற்கு நம்முடைய பாட்டிகள் சொன்ன ஒரு தீர்வுதான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலருக்கு இந்த குறிப்பு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு இது. இந்த ரெமிடிக்கு நீங்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சில பேருக்கு நல்லெண்ணெய் குளிர்ச்சி தரும் என்பதால், உடலுக்கு ஒத்து வராதவர்கள், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஒரு குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெயை எண்ணெயை எடுத்துக் கொண்டால், 6 லிருந்து 7 பல் பூண்டுகளை தோல் உரித்து, அந்த எண்ணெயில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்ய வேண்டும். அதாவது பூண்டு பொன்னிறமாக சிவக்கும் வரை எண்ணெயை நன்றாக சூடு படுத்துங்கள். அதன் பின்பு இதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டோடு இருக்கும்போதே, எடுத்து உங்களது தலைகளில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, இரண்டு மணிநேரம் வரை ஊற விட்டு விடுங்கள். குறைந்தது 15 நிமிடங்களாவது மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு சீயக்காய் போட்டு தலையை நன்றாக தேய்த்து கசக்கி குளித்து விட்டு, ஈர தலையிலேயே பேன் சீப்பை வைத்து தலையை சீவினால் தலையில் இருக்கும் பேன் பொடுகு அத்தனையும் உங்கள் தலையை விட்டு நீங்கிவிடும்.
பேனுக்கு பூண்டின் வாடை சுத்தமாக பிடிக்காது. உங்கள் தலையை விட்டு வெளியேறி விடும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதே எண்ணெயை மீண்டும் மீண்டும் தலைக்கு பயன்படுத்தி வந்துகொண்டே இருந்தால், நிரந்தரமாக உங்கள் தலையில் பேன் பொடுகு பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று முயற்சி செய்து பாருங்கள். பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் 100% இயற்கையான முறையில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியங்களில் இதுவும் ஒன்று.