Advertisement

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் நெஞ்சு சளி, வரட்டு இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகள் அனைத்தையும் 3 நாட்களில் சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் நெஞ்சு சளி, வரட்டு இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகள் அனைத்தையும் 3 நாட்களில் சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.

நீண்ட நாட்களாக ஒருவருக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், அதுவே பிற்காலத்தில் சைனஸ் ஆஸ்துமா போன்ற பல பிரச்சினைகள் வருவதற்கு காரணமாக மாறி விடும். முடிந்தவரை நெஞ்சு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லது. எவ்வளவுதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகத சளி கூட, சில கை வைத்தியங்களில் குணமாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு கை வைத்தியத்தை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை எடுத்து ஒரு கசாயத்தை தயார் செய்யப் போகின்றோம். இந்த கஷாயத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல வித்தியாசம் தெரியும்.

karpuravalli 1

கசாயம் செய்ய தேவையான பொருட்கள். கற்பூரவள்ளி இலை – 2, கருஞ் சீரகம் – 1/4 ஸ்பூன், அரிசி திப்பிலி – 2, மிளகு – 5. இந்தப் பொருட்களுக்கு 100 ml அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.

கற்பூரவல்லி இலைகளை உங்கள் கையாலேயே சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். அரிசித் திப்பிலி, மிளகு இந்த 2 பொருளை மட்டும் ஒரு சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கிழித்த கற்பூரவள்ளி இலைகளையும், இடித்து வைத்திருக்கும் அரிசித்திப்பிலி மிளகையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து மிதமான தீயில் இந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

Milagu benefits in Tamil

இந்த தண்ணீர் சுண்டும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் இந்த பொருட்கள் தண்ணீர் கொதித்தாலே போதும். அதன் பின்பு ஒரு வழிகாட்டியின் மூலம், வடிகட்டி அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். இனிப்பு சுவைக்காக தேன் நாட்டு சர்க்கரை எல்லாம் கலந்து குடிக்கக் கூடாது.


கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் குடிக்க கூடாது. மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்களும் இதை குடிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு சளியுடன் சேர்ந்த வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் இதே கசாயத்தில் ஐந்து வேப்ப இலைகளை போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை சங்கடையில் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை கொடுக்கும் பட்சத்தில் சளி தொந்தரவிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். தொடர்ந்து 3 நாட்கள் கொடுக்க வேண்டும்.

kasayam1

பெரியவர்களாக இருந்தால் 100ml தண்ணீரை கொதிக்கவைத்து அப்படியே குடிக்கலாம். 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சங்கடையில் 3 சாங்கடைகள் வரை கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கும். நுரையீரலில் சளி இருந்தாலும் அது நிச்சயமாக வெளியேறிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.