வெறும் 30 நாட்களில் 10 கிலோ வரை எடையை சுலபமாக குறைக்க முடியும். வெறும் 1 டம்ளர் இந்த ஜூஸ் காலையில குடிச்சாலே போதும்.
உடல் பருமனாக இருப்பவர்கள் தங்களுடைய எடையைக் குறைப்பதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் அந்த அதிகப்படியான எடையை மிக மிக சுலபமான முறையில் குறைத்துவிட முடியும். கொஞ்சம் கஷ்டப்பட்டு காலையில் 1 டம்ளர் இந்த ஜூஸை கண்ண மூடிட்டு குடித்து விட்டாலே போதும். கண்ணை துறந்துகிட்டு குடித்தாலும் தப்பில்லங்க! கசப்பான எவ்வளவோ மருந்துகளை சாப்பிட்டு கஷ்டப்பட்டு வருகின்றோம். அந்த கசப்பான மருந்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஜூஸ் குடிப்பது ஒன்றும் கடினமே கிடையாது. சரி, இந்த ஜூஸை தயார் செய்ய நமக்கு எந்த பொருள் தேவை? என்பதை பார்த்து விடலாம் வாங்க.
நம் எல்லோருக்கும் தெரிந்த சுரக்காய் தான் அந்த ஒரு பொருள். இந்த சுரைக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மையும் இதற்கு உண்டு. உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இதயம் சீராக இயங்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். சில பேருக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும் பட்சத்திலும் உடல் எடை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உடல் சூடு குறையும் பட்சத்தில், நமக்கு இருக்கக்கூடிய டென்ஷனும் நிச்சயம் குறையும். எல்லாவிதத்திலும் இந்த சுரக்காய் நமக்கு நன்மையைத் தரக்கூடியது.
சுரைக்காயை வாங்கி அதில் உள்ள தோளை மட்டும் நீக்கி விடுங்கள். உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடக்கூடாது. அப்படியே சிறிய துண்டுகளாக சாம்பாருக்கு வெட்டுவது போல் வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய சுரைக்காயை 150 கிராம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் வெட்டிய சுரைக்காயை போட்டு ஒரு இன்ச் இஞ்சித்துண்டை போட்டு, ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு இணுக்கு கொத்தமல்லி தழைகளை போட்டு, 200ml தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இதில் நாம் கருவப்பிள்ளை கொத்தமல்லித்தழையை சேர்க்கும்போது நல்ல வாசமாக இருக்கும். இதோடு சேர்த்து முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் கருவேப்பிலையில் அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதுவும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நன்மையை கொடுக்கும்.
அதன்பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் திப்பி அனைத்தையும் வடிகட்டி விட்டு, ஜூஸை மட்டும் குடிக்க வேண்டும். காலையில் நீங்கள் பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. காலையில் எழுந்ததும் உங்களுக்கு வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தால், உங்களுடைய வாக்கிங்கை முடித்து விட்டு வந்து, 1/2 மணி நேரம் கழித்து 1 டம்ளர் இந்த ஜூஸை குடிச்சிடுங்க போதும்.
30 நாட்கள் உடற்பயிற்சியோடு சேர்த்து இந்த ஜூஸை குடித்து வந்தாலே, ஒரே மாதத்தில் 6 லிருந்து 7 கிலோ நிச்சயமாக எடை குறையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இதோடு சேர்த்து வரக்கூடிய வெயில் காலங்களில் உங்களுக்கு சிறுநீர் பிரச்சனை, உடல் சூடு பிரச்சனை போன்ற பல விதமான பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். தினமும் வெறும் 10 ரூபாய் செலவு கூட ஆகாது. ஆனால் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றம் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க.