வெறும் 30 நாட்களும், இந்த 2 இரண்டு எண்ணெய்களுமே போதும். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தலைமுடி அடர்த்தியாக கருகருவென வளர்ந்து கொண்டே செல்லும்.
முதலில் முடி கொட்டும் பிரச்சினை இருந்தால் நம்முடைய முடி கொட்டி விடுகிறது என்று மிகவும் கவலைப் படுவதை நிறுத்த வேண்டும். கவலைப்பட்டுக் கொண்டே மன அழுத்தத்தோடு இருப்பது தான் முடி கொட்டுவதற்கு முதல் காரணம். முடி உதிர்வு இருந்தால் அதற்கு என்ன காரணம். என்ன செய்தால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். என்று நிதானமாக சிந்திப்பது நல்லது. உணவு பழக்கவழக்கத்தோடு சேர்த்து முடி உதிர்வை கட்டுப்படுத்துவது மிக மிக சுலபமான விஷயம்தான்.
30 நாட்கள் இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு முடி உதிர்வு நிச்சயமாக கட்டுப்படும். முப்பதே நாட்களில் முடி வளர்ச்சியை நம்மால் கண்கூடாக காணமுடியும். மூன்றே மாதங்களில் உங்களுடைய தலைமுடி அடர்த்தியாக கருகருவென வளர வளர தொடங்கும். பின் சொல்லப்படும் குறிப்பை மட்டும் பின்பற்றி பாருங்கள் போதும்.
முடி வளர்ச்சிக்கு நம்முடைய உடலில் புரோட்டின், ஐயன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, ஒமேகா-3, பயோடின், இந்த சத்துக்கள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதற்கு எந்த பொருட்களை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது.
முட்டை, பச்சைப்பயறு, பன்னீர், கீரை வகைகள் குறிப்பாக முருங்கைக் கீரை, கேரட், பப்பாளி, சக்கரைவள்ளி கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம், மீன் வகைகள், காலிஃப்ளவர், மஸ்ரூம், டிரைஃபுட்ஸ், கருப்பு கொண்டை கடலை, பச்சைப் பயிறு, கருவேப்பிலை பேரிச்சம்பழம் இந்த பொருட்களை உங்களுடைய உணவில் மாற்றி மாற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே உணவை தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக இதில் இருக்கும் உணவுகளை நாம் சாப்பிட்டு வரவேண்டும்.
- Advertisement -
இதோடு சேர்த்து உங்களுடைய தலைமுடிக்கு இந்த இரண்டு எண்ணெய்யை சேர்த்து நன்றாக மசாஜ் செய்து அதன் பின்பு தலைக்கு குளிக்கவேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த ஆயில் மசாஜ் செய்து நல்ல ஹெர்பல் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்தால் மூன்று மாதங்களில் நல்ல ரிசல்டை பார்க்க முடியும்.
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய். 2 ஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், 1 ஸ்பூன் விளக்கெண்ணை, இதுதான் அளவு. ஒரு சிறிய பௌலில் முதலில் 2 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி அதன் பின்பு 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து ஒரு பஞ்சில் அந்த எண்ணெயைத் தொட்டு உங்களுடைய தலை முடியின் வேர்க்கால்களில் வைத்து வைத்து நன்றாக தடவி விடவேண்டும்.
தலைமுடியை பகுதி பகுதியாக பிரித்துக் கொள்ளுங்கள் வகுடு போல வரும் அல்லவா அந்த இடத்தில் எல்லாம் எண்ணெயில் நனைத்த இந்த பஞ்சை வைத்து வைத்து மசாஜ் செய்யவேண்டும். எண்ணெய் நன்றாக வேர் பகுதிகளில் ஊறவேண்டும்.
30 லிருந்து 45 நிமிடங்கள் எண்ணெய் தலையில் நன்றாக ஊறிய பின்பு தலைக்கு குளித்து விட வேண்டியது தான். இப்படி செய்தாலே போதும். 30 நாட்களில் நிச்சயம் உங்களுடைய தலை முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசத்தை பார்க்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.