4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயும், 1 துண்டு கேரட்டும் இருந்தா போதுமே! உங்கள் முகத்தை 10 வயதை குறைத்து காட்டலாமே!
எல்லோருக்குமே முகம் என்பது என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். இளமையான தோற்றத்துடன் இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? முந்தைய காலங்களில் எல்லாம் நல்ல ஆரோக்கியம் இருந்தது. உடலை கட்டுக்கோப்பாகவும், இளமையாகவும் வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது 30 வயதை நெருங்கும் போதே 40 வயது உடைய தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. இப்படி இளம் வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்தை சுலபமாக தடுக்க இந்த இரண்டு பொருளே போதும்! சரி அதை வைத்து என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ முதல் எண்ணற்ற சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கக் கூடியது ஆகும். சருமம் மட்டுமல்ல, கேசத்திற்கும் நல்ல ஊட்டச்சத்து கொடுக்கக் கூடியது. இந்த குறிப்பை பயன்படுத்தி தலை மற்றும் முகத்தை பளபளப்பாக பத்தே நாளில் மாற்றி விடலாம்.
இந்த குறிப்பை தயார் செய்ய தேவையான பொருட்கள், சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன் மற்றும் ஒரு சிறு துண்டு கேரட் ஆகும். ஆனால் முகத்திற்கு மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் கூடுதலாக கற்றாழை ஜெல்லை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும். ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் விட்டு கொள்ளுங்கள். எண்ணெய் லேசாக சூடு ஏறியதும் துருவி வைத்துள்ள ஒரு துண்டு கேரட்டை அப்படியே போட்டு கொதிக்க விடுங்கள்.
5 நிமிடம் நன்கு கொதித்ததும் தேங்காய் எண்ணெயில் காரட் சாறு முழுவதும் இறங்கி விட்டிருக்கும். தேங்காய் எண்ணெயின் நிறம் லைட் ஆரஞ்சு நிறத்தில் மாறி இருக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். எண்ணெய் சூடு ஆறியதும் ஒரு காட்டன் துணியில் இந்த எண்ணெயை அப்படியே ஊற்றி நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே இரவு தூங்கும் முன் தலை முடியின் வேர்க்கால்களில் தடவி விட்டு 10 நிமிடம் மசாஜ் செய்து பின் தூங்க சென்றால் பிரமாதமான தூக்கமும் வரும், தலை முடியின் வளர்ச்சியும் வெகுவாக அதிகரிக்கும்.
மண்டையோட்டில் இருக்கும் இறந்த செல்கள் மீண்டும் புத்துணர்வு பெற்று முடி வளர்ச்சியை தூண்ட செய்யும். இந்த எண்ணெயுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் இயற்கையாக கிடைத்தாலும் அல்லது ஜெல் வடிவில் கடைகளில் வாங்கி கலந்தாலும் சரி ஒரு ஸ்பூன் அளவிற்கு கலந்து நன்கு க்ரீம் பதத்திற்கு செய்து கொள்ளுங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் லேசாக முன்னும் பின்னுமாக மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 15 நிமிடங்கள் இதே போல மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் புத்துணர்வு பெறும்.
மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், மாசு மருக்கள் அத்தனையும் நீங்கும். முகம் தெளிவான தோற்றம் அடையும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை சோப்பு போட்டு கழுவி விடலாம். சோப்பு பயன்படுத்த விரும்பாத வகையில் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு பயன்படுத்தி கழுவிக் கொள்ளுங்கள். இது போல 10 நாட்கள் செய்தால் போதும், கேசமும், முகமும் பளிச்சென ஜொலித்திடும். எண்ணெய் பயன்படுத்துவதால் கூடுமானவரை இரவு நேரத்தில் இதனை செய்து விட்டு தூங்க செல்வது நல்லது.