Advertisement

அடடா! இந்த தவறுகளை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் வருமா? சரி என்று நினைத்துக்கொண்டு அன்றாட வாழ்வில் நாம் செய்யும் 4 தவறுகள்!

அடடா! இந்த தவறுகளை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் வருமா? சரி என்று நினைத்துக்கொண்டு அன்றாட வாழ்வில் நாம் செய்யும் 4 தவறுகள்!

நாம் பார்ப்பதை வைத்து கேட்பதை வைத்து தினசரி வாழ்க்கையில் நாம் சில தவறுகளை செய்து வருகின்றோம். அதன் மூலம் நமக்கு ஏற்படுகின்ற பக்க விளைவுகள் என்னவென்று தெரிவதே கிடையாது. இப்படியாக நம்மை அறியாமலேயே நமக்கு கெடுதல் தரக்கூடிய தவறுகள் நிறையவே உள்ளது. அதில் இருந்து 4 தவறுகளை பற்றி மட்டும் இன்று நாம் தெரிந்து கொள்வோம். முதல் தவறு இன்றைக்கு தூங்கி எழுந்தவுடன் நம்முடைய கைகள் தேடுவது நம்முடைய கைபேசியை தான். காலையில் எழுந்ததும் கைபேசியை பார்த்து அதில் வந்திருக்கும் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு.

cell-phone

கைப்பேசியில் வந்திருக்கக்கூடிய செய்திகளை காலையிலேயே கண் விழித்தவுடன் படிப்பதன் மூலம் நமக்கு மன அழுத்தம், கோபம் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியில் சொல்லப்பட்டுள்ளது. காலையில் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு ரிலாக்ஸ் செய்து விட்டு அதன் பின்பு மொபைல் பார்க்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக எல்லோரும் பல் தேய்க்கும் போது செய்யக்கூடிய தவறு இது. சில விளம்பரங்களை பார்த்து பிரஷ் நிறைய உருண்டையாக பல் தேய்க்கும் பசையை வைத்து பல் தேய்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். ஆனால் பல் பசை என்று சொல்லப்படும் இந்த பேஸ்டை, டூத் பிரஷில் முழுமையாக வைக்கக்கூடாது. தினமும் அதிகமான டூத்பேஸ்ட் நாம் பயன்படுத்தினால் நம் பல்லில் இருக்கும் enamel சீக்கிரமே நீங்கிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் குளிர்ச்சியான பொருட்கள், சூடான பொருட்கள், இனிப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடும் போது பல் கூச்சம் ஏற்படுகின்றது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இனியாவது பல் தேய்க்கும்போது பேஸ்டை கொஞ்சமாக பயன்படுத்துங்கள்.

bathing

நிறைய பேருக்கு காலையில் எழுந்து பல் தேய்த்த பின்பு சூடான தண்ணீரில் குளிப்பது மிகவும் பிடிக்கும். சூடான தண்ணீரில் குளிப்பது ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அதிக சூட்டுடன் தினம்தோறும் நாம் குளித்து வந்தால் நம் உடலில் இருக்கும் நல்ல செல்கள் அழிந்து விடும். நம்முடைய தோலில் வறட்சி தன்மை ஏற்படும். அரிப்பு ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு அதிக சூடுள்ள தண்ணீரில் குளிப்பதும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.


வைட்டமின் சத்தும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும் இந்த முட்டை இல்லாத ப்ரிட்ஜே நிறைய பேர் வீடுகளில் இருக்காது. முட்டையை சாப்பிடுவது தவறு ஒன்றும் கிடையாது. ஆனால் வீட்டில் முட்டையை ஸ்டோர் செய்வதற்காக நிறைய வாங்கி வந்து அந்த முட்டையை நிறைய பேர் தண்ணீர் ஊற்றி கழுவி விடுவார்கள். முட்டை ஓட்டின் மேல் இருக்கக் கூடிய cuticle தண்ணீர் ஊற்றி கழுவும்போது நீக்கப்படுகிறது.

egg

இந்த cuticle என்று சொல்லப்படும் பாதுகாப்பு வட்டம் தான் முட்டையை கெட்ட பாக்டீரியாக்கள் தாக்காமல் பாதுகாக்கின்றது. முட்டையை வாங்கி வந்தவுடன் கழுவி ஸ்டோர் செய்யும் பட்சத்தில் அந்த முட்டை சீக்கிரமே கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய முட்டையை வாங்கி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து சாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

Egg

முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைத்து விட்டு 30 நிமிடங்கள் கழித்து தான் சமைத்து சாப்பிட வேண்டும். மேல் சொன்ன தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா. அதை திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நோயற்ற வாழ்க்கைதான் குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். இன்று பல நோய்கள் வருவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்பதும் நமக்கே தெரிவதில்லை.