பல் வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 4 விஷயங்களை உடனே செய்யுங்கள்..!
பற்களில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, சொத்தைப்பல் இப்படி பல் பராமரிப்பின்மையால் உண்டாகக் கூடிய வலியாகும். அவ்வாறு உங்களுக்கு பல் வலியானது மிகவும் கடுமையாக இருந்தால் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
பல் வலி வந்துவிட்டாலே எந்த வேலையும் செய்ய முடியாது. பற்களை பிடுங்கிவிடலாமா என்கிற அளவிற்கு வலி உண்டாகும். இது பற்களில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, சொத்தைப்பல் இப்படி பல் பராமரிப்பின்மையால் உண்டாகக் கூடிய வலியாகும். அவ்வாறு உங்களுக்கு பல் வலியானது மிகவும் கடுமையாக இருந்தால் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். சாதாரண வலிதான் எனில் இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்.
வாயை உப்பு நீரால் கொப்பளிக்கவும் : தொண்டை புண், இருமல் அல்லது பல்வலிக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின் அதை பற்களில் படும்படி வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து துப்புங்கள். இவ்வாறு செய்வதால் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கலாம். இதனால் வலி குறையும். இருப்பினும், வலியைத் தொடர்ந்து வீக்கம் ஏற்பட்டால், பல் மருத்துவரை அணுகுவது நல்லது.
பூண்டு வைக்கலாம் : பூண்டு அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்ற வீட்டு வைத்தியமாகும். குறிப்பாக பல் வலிக்கு, பூண்டு பல அற்புதங்களைச் செய்யும். ஒரு கிராம்பு மற்றும் பூண்டு இரண்டையும் நசுக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். வலி போகும் வரை அப்படியே இருக்கட்டும். சில மணி நேரங்களில் சரியாகவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள்.
குளிர்ச்சியான ஒத்தடம் : ஒரு துண்டை எடுத்து, அதில் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து கட்டுங்கள். அதை பல் வலிக்கும் தாடையில் அழுத்தவும். இது வலியைக் குறைக்க உதவும் அல்லது குறைந்தபட்சம், அதன் தீவிரத்தைக் குறைக்கும்.
கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துங்கள் : பல் வலியை போக்க கிராம்பு எண்ணெய் சிறந்தது. கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பல் வலியைப் போக்கவும் உதவும். பஞ்சை உருண்டையாக்கி சிறிது கிராம்பு எண்ணெயில் முக்கி, பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவும். வலியின் தீவிரம் குறையும் வரை அப்படியே வைக்கவும்.
குறிப்பு: நிபுணர்களின் பரிந்துரைப்படி, வருடத்திற்கு இரண்டு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். இதனால் நோய்த்தொற்றின் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.