‘வயிறு உப்புசம்’ பிரச்சனை தீர 5 எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்! இத செஞ்சா போதும் 15 நிமிடத்தில் வயிறு காலியாகிவிடும்.
வயிறு உப்புசம் பிரச்சனை என்பது ஒரு தற்காலிக நிலை தான். ஆனால் இதைப் பலரும் தொப்பை என்று நினைத்துக் கொள்கிறார்கள். வயிறு உப்புசம் சிலருக்கு வலியை உண்டாக்கும். வயிற்றில் தேங்கி இருக்கும் தேவையற்ற வாயு வயிற்றை உப்புசமாக காண்பிக்கும். இதனால் வயிற்றில் லேசான வலியும், ஒரு விதமான அசௌகரியமும் ஏற்படும். கண்டதையும் சாப்பிட்டு வயிறு உப்புசத்தால் அவதிப்பட்டால் இந்த 5 விஷயங்களை மேற்கொண்டு பாருங்கள்! 15 நிமிடத்தில் நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும். அதைப் பற்றி தொடர்ந்து இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள், செரிமான கோளாறு, சில உணவுகளால் ஏற்படும் அலர்ஜி என்று வெவ்வேறு காரணங்கள் வயிறு உப்புசத்திற்கு கூறப்படுகிறது. நிறைய தண்ணீர் பருகி கொண்டே இருந்தாலும் வயிறு உப்புசம் ஏற்படும். எண்ணெய் பதார்த்தங்கள் அளவில்லாமல் சாப்பிட்டாலும் இந்நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இவற்றிலிருந்து எளிதாக நிவாரணம் காண நம் வீட்டில் இருக்கும் எளிய இயற்கை வைத்தியத்தை கையாண்டு பார்க்கலாம்.
1. எலுமிச்சை பழம்:
ஒரு எலுமிச்சை பழச்சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் எதுவும் சேர்க்காமல் அப்படியே குடித்து விடுங்கள். இதில் இருக்கும் அசிட்டிக் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கி செரிமானத்தை தூண்டி தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற செய்யும் இதனால் வயிற்றில் வலியும் குறையும்.
2. வாழைப்பழம்:
பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும் என்று கூறுவது உண்டு. வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எளிதாக கலைகிறது. அதில் வயிற்று உப்புசத்தை விரைவாக சரி செய்யக்கூடிய ஆற்றல் நிறைந்துள்ளது. வயிறு உப்புசமான நேரத்தில் ஒன்றிரண்டு வாழைப் பழங்களை சாப்பிடுங்கள். பிறகு பசி எடுக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
3. ஓமம்:
குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் தீர ஓமத்திரவம் கொடுப்பது உண்டு. அசௌகரியமான சமயத்தில் கொஞ்சம் ஓமத்தை வாயில் போட்டு தண்ணீரை குடித்து விடுங்கள். கொஞ்ச நேரத்தில் வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுவை அகற்றி வயிற்று உப்புசத்தை குறைத்துவிடும்.
4. உடற் பயிற்சி:
வயிறு உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமான சமயத்தில் மெல்லோட்டம், நடைப்பயிற்சி, ஆசனங்கள், நீச்சல் ஆகியவற்றை மேற்கொண்டால் கொஞ்ச நேரத்தில் வயிற்று உப்புசம் சரியாகிவிடும். பாரத்வஜசானா எனும் ஆசனத்தை செய்தாலும் விரைவாக வயிறு உப்புசம் சரியாகும். இது போல வாயுவை வெளியேற்ற நிறைய ஆசனங்கள் உண்டு.
5. சோம்பு:
பிரியாணி சாப்பிட்டுவிட்டு அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க இனிப்பு சோம்பை சாப்பிடுவது வழக்கம். நாம் எப்போதெல்லாம் அதிகமாக சாப்பிட்டது போல உணர்கிறோமோ! அப்போதெல்லாம் கொஞ்சம் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றால் போதும் எளிதில் ஜீரணமாகிவிடும். அவ்வகையில் வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு கொஞ்சம் சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் போதும் பத்தே நிமிடத்தில் வயிறு காலியாகிவிடும். வயிறு உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமாக உணரும் சமயத்தில் மேற்கண்ட 5 விஷயத்தில் ஏதாவது ஒன்றை கையாண்டால் விரைவில் அதிலிருந்து நல்ல நிவாரணம் அடைவீர்கள்.