Advertisement

5 நிமிடத்தில் உங்கள் முகம் ஒரிஜினல் கலருக்கு மாற இப்படி மட்டும் செய்தால் போதுமே!

5 நிமிடத்தில் உங்கள் முகம் ஒரிஜினல் கலருக்கு மாற இப்படி மட்டும் செய்தால் போதுமே!

எல்லோருடைய முகமும் இயற்கையாக ஒரு நிறத்திலும், போகப் போக சுற்றுச்சூழல் காரணமாக ஒரு நிறத்திலும் மாறக்கூடும். சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும் ஆனால் முகம், கை, கால்கள் கருத்த நிறத்தில் இருக்கும். இவர்களுடைய இயற்கை நிறம் பெறுவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. வெயிலின் தாக்கத்தினால் அதுபோல் நம்முடைய சுய நிறம் மங்கிப் போய் விடுகிறது. இதிலிருந்து ஐந்தே நிமிடத்தில் எப்படி மீள்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

face0

நீங்கள் திடீரென வெளியே எங்காவது செல்ல வேண்டும் என்றாலோ அல்லது விசேஷ, விழாக்கள் என்று கலந்து கொள்ள நினைக்கும் பொழுது சட்டென இதை செய்து விட்டு அதன் பிறகு வழக்கமான மேக்கப் போட்டால் அவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? இதற்கு அதிக செலவு கூட செய்ய தேவை இல்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். இந்த பொருட்கள் எப்போதும் வீட்டில் நிச்சயம் இருக்கும். இப்படி எளிதாக கிடைக்கக் கூடிய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஐந்து நிமிடத்தில் முகத்தில் இருக்கும் மாசு, தூசிகளை நீக்கி பொலிவான தோற்றத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதை செய்ய தேவையான பொருட்கள்: ஒரு தக்காளி பழம், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை அவ்வளவு தாங்க.

முதலில் தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பகுதியை மட்டும் நன்கு கத்தி அல்லது ஸ்பூன் கொண்டு கீறிக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் உள்ளே இருக்கும் ஜூஸ் நமக்கு கிடைக்கும். அதன் மீது மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது மூடியை அப்படியே முகத்தின் மீது வைத்து கிளாக் மற்றும் ஆன்டி க்ளாக் வைஸ் முன்புறமும், பின்புறமும் நன்கு சுற்றி எடுக்க வேண்டும்.

tomato

ஒரு 2 நிமிடம் வரை இப்படியே செய்து கொண்டிருங்கள். இதை செய்யும் பொழுது மஞ்சளில் இருக்கும் மூலக்கூறுகள் முகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், தூசிகள், நுண்கிருமிகள் அத்தனையும் வெளியாகி விட்டிருக்கும். அதன் பிறகு மீதி இருக்கும் இன்னொரு பழத்தின் மூடியை எடுத்து இதே போல ஸ்பூன் அல்லது கத்திக் எடுத்துக் கீறிக் கொள்ளுங்கள். தக்காளி பழத்தில் இருக்கும் ஜூஸ் உடன் சேர்த்து எலுமிச்சைச் சாறு கலந்து கொள்ளுங்கள்.


அதில் சிறிதளவு சர்க்கரை போட்டு சர்க்கரை கரைவதற்குள் முகத்தில் இதே போல முன்புறமும், பின்புறமும் ஆக மாற்றி மாற்றி தேய்த்து முகம், நெற்றி, மூக்கு, தாடை ஆகிய பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். சர்க்கரையில் இருக்கும் சொரசொரப்பு தன்மை ஸ்கிரப்பராக முகத்திற்கு வேலை செய்யும். எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரஸ் மற்றும் விட்டமின் சி முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, வறண்ட சருமத்தை ஈரப்பதமாக மிருதுவாக மாற்றும். மேலும் தக்காளி பழத்தில் இருக்கும் சாறு முகத்தை பொலிவாக்க செய்யும்.

tomato-with-sugar-on-face

இவை அனைத்தும் ஒன்று சேரும் பொழுது முகத்தில் திறந்து இருக்கும் துவாரங்கள் இறுக்கமடைந்து முக சுருக்கம் நீங்கும். பின்னர் முகத்தில் இருக்கும் சிறு சிறு வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று இருக்கும். முகப் பருக்கள் இருந்தாலும் அவற்றில் இருக்கும் கிருமிகளை அழித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இப்படி செய்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு பின்னர் சாதாரணமாக நீங்கள் அலங்காரம் செய்து கொண்டால் கூட முன்பு இருந்ததை விட பளிச்சென்று வெண்மையாக நல்ல கலராக மாறி இருப்பீர்கள்.