Advertisement

நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உங்களுடைய முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர, தேங்காய் எண்ணெயுடன், 5 சொட்டு இந்த ஒரு பொருளை சேர்த்தாலே போதும்.

நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உங்களுடைய முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர, தேங்காய் எண்ணெயுடன், 5 சொட்டு இந்த ஒரு பொருளை சேர்த்தாலே போதும்.

ATTACHMENT DETAILS

எல்லோருக்குமே அழகின் மீது ஒரு ஆசை இருக்கத்தான் செய்கின்றது. நமக்கு அந்த அழகு இயற்கையாக கிடைக்க வேண்டும் என்றால் சரும அழகுடன் தலைமுடியும், கருப்பாக  அடர்த்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அழகு முழுமைபெறும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை என்பது இந்த காலகட்டத்தை அதிகமாகத்தான் உள்ளது. முடி உதிர்வை உடனடியாக நிறுத்தி, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைக்க சுலபமான முறையில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair

முடி வளர்ச்சியை அதிகரிக்க நம் வீட்டிலேயே இயற்கையாகவே பல எண்ணெய்களை தயார் செய்து பயன்படுத்த முடியும். ஆனால் எல்லோராலும் எண்ணையை வாங்கி, முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்களை சேகரித்து எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி பயன்படுத்துவது என்பது முடியாத ஒரு காரியம். எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் முடியை வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக மிக சுலபமான முறையில் ஒரு எண்ணெய். இதற்கு பணமும் அதிகப்படியாக செலவு ஆகாது. நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும்.

உங்கள் வீட்டு தேங்காய் எண்ணையில் சேர்க்க வேண்டிய அந்த ஒரு பொருள் வேற எதுவும் இல்லைங்க! நம் எல்லோருக்கும் தெரிந்த வைட்டமின் E கேப்ஸ்யூல் தான். 250 கிராம் தேங்காய் எண்ணெயில், 5 வைட்டமின் E கேப்ஸ்யூல்களை சேர்க்க வேண்டும். சிறிய சிறிய மாத்திரைகளாக உங்களுக்கு கிடைக்கும் அல்லவா? அதிலிருந்து 5 கேப்ஸ்யூல்களை எடுத்து, அதன் உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் இந்த தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொண்டால் போதும்.

கேப்ஸ்யூல்களை தேங்காய் எண்ணெயில் சேர்த்து விட்டு, நன்றாக கலந்து ஒரு நாள் வரை ஊற வைத்துவிடுங்கள். மறுநாளிலிருந்து அந்த எண்ணெயை நீங்கள் தலைக்கு பயன்படுத்தி வாரலாம். சாதாரண தேங்காய் எண்ணெயை முடிக்கு எப்படி பயன்படுத்தி வருவீர்களா அதேபோல் இந்த எண்ணெயையும் பயமில்லாமல் பயன்படுத்தலாம். செயற்கையான கேப்ஸ்யூல் என்பதால் இதில், பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இந்த வைட்டமின் E கேப்ஸ்யூலை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்பதற்கு வாய்ப்பே கிடையாது.

சிலர் இந்த மாத்திரையை உள்ளுக்கு சாப்பிட பயன்படுத்துகிறார்கள். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையாக இருந்தாலும், உள்ளுக்கு சாப்பிடுவது அவளது சரியான விஷயம் அல்ல. சருமத்திற்கும், தலைமுடிக்கும் பயன்படுத்தும் போதும் கூட, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, அது நமக்கு ஆபத்தையும் பக்க விளைவுகளையும் தான் தரும்.

long-hair

மேலே சொன்ன அளவுகளில், தேங்காய் எண்ணெயுடன் இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கலந்து உங்களுடைய தலைமுடிக்கு தேய்த்து வந்தாலே போதும். தலைமுடி உதிர்வு உடனடியாக குறைந்து முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர தொடங்கிவிடும். தலைக்கு மேலே என்னதான் எண்ணெயை தேய்த்து தேய்த்து முடியை வளர்த்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்து என்பது கிடைக்க வேண்டும். சத்தான ஆகாரங்களை சாப்பிட்டு, உடன் இந்த எண்ணெய் தேய்க்கும்போது நல்ல பலனை உடனடியாக பெறமுடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.