OMTEX AD 2

தினமும் இதை மட்டும் சாப்பிட்டாலே போதும். 7 நாட்களில் உங்கள் முடி தாறுமாறா வளர ஆரம்மிச்சிடும். நீங்களே நினைச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.

தினமும் இதை மட்டும் சாப்பிட்டாலே போதும். 7 நாட்களில் உங்கள் முடி தாறுமாறா வளர ஆரம்மிச்சிடும். நீங்களே நினைச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.

முடி வளர்ச்சிக்கு எத்தனையோ எண்ணெய்களை போட்டு, எவ்வளவோ ட்ரீட்மெண்ட் எடுத்தும் முடி வளர்ச்சி இல்லை எனும் பட்சத்தில், இயற்கையான முறையில் உங்களது உணவு பழக்கவழக்கத்தை வைத்தே, வெறும் ஏழு நாட்களில், புது முடிகளை வளர வைப்பதற்கான ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிரமப்படாமல் நமக்கு எதுவுமே கிடைத்துவிடாது. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த உணவு பழக்க வழக்கங்களை தினசரியாக உங்களுடைய அன்றாட பழக்க வழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் முடி ஆரோக்கியமாக வளரும். உங்களுடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

hair5

பொதுவாகவே புரோட்டீன் பற்றாக்குறை, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, சத்துக்கள் தேவையான அளவு உடலில் இல்லை என்றால் முடியின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்த சத்துக்களை எல்லாம் நம்முடைய உடலுக்கு சீராக தரக்கூடிய பொருட்களை தினம் தோறும் நாம் சாப்பிட்டு வரவேண்டும்.

முதலில் காலை எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு 1 டம்ளர் அளவு தண்ணீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. டீ காபிக்கு பதிலாக சத்துமாவு கஞ்சியைக் குடிக்கலாம். காலை இட்லி தோசைக்கு பதிலாக கம்பு மாவு, கேழ்வரகு மாவு, வரகு, தினை இப்படிப்பட்ட சிறு தானியங்கள் சேர்க்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

கட்டாயமாக இதனுடன் சைட் டிஷ் ஆக, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்த சட்னி வகைகளை சாப்பிடுவது மேலும் நன்மையை கொடுக்கும். மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் அதனுடன் ஒரு கீரை வகை அவசியம் தேவை. குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக்கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை, இந்த கீரை வகைகளை வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். மாலை நேரத்தில் கட்டாயம் ஏதாவது ஒரு சுண்டல் அவசியம் சாப்பிட வேண்டும். (கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, மொச்சை, கொள்ளு, காராமணி இப்படி எந்த சுண்டலை சாப்பிட்டாலும் சரி தான்.)

இப்படியாக உங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். மேல் சொன்ன விஷயங்களோடு, இப்போது சொல்லப்படும் ஜூஸை தினமும் குடித்து பாருங்கள். நிச்சயமாக 7 நாட்களில் உங்களது முடி வளர்வதை கண்கூடாக காணமுடியும்.

mint-puthina-plant

இந்த ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள். பாதாம் பருப்பு –  4, flax seeds என்று சொல்லப்படும் ஆளி விதைகள் – 1 டேபிள்ஸ்பூன், நெல்லிக்காய் – 1, பேரிச்சம் பழம் – 2, சிறிய கேரட் – 1. இதில் பாதாம் பருப்பையும், ஆளி விதை களையும் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு,முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

aali-vithai

மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஊறவைத்த பாதாம் பருப்புகளையும், ஆளி விதைகளையும் தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு பேரிச்சம்பழம் நெல்லிக்காயில் உள்ள கொட்டை மட்டும் நீக்கிவிட வேண்டும். கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டோ அல்லது பால் விட்டோ, இந்த ஜூஸை அரைத்து, வடிகட்ட கூடாது. அப்படியே குடித்து விட வேண்டும். தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து இதை குடிப்பது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

juice

இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆளிவிதையில் ஒமேகா-3 சத்து அதிகமாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு அவசியமாக தேவைப்படும் இந்த சத்து கொண்ட ஆளி விதைகளை தினமும் மேல் சொன்ன ஜூஸில் தான் கலந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், வெறும் கேரட் ஜூஸ் என்று கூட ஊறவைத்த விதை களை சேர்த்து ஜூஸாக தயார் செய்து குடிக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருந்தால் மேற்சொன்ன குறிப்புகளை 7 நாட்கள் தொடர்ந்து முயற்சித்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

OMTEX CLASSES AD