இந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே! உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.
கேரளாவில் உள்ளவர்கள் அதிகப்படியான தொப்பை இல்லாமல், உடலை கட்டுக்கோப்பாக மெயின்டைன் பண்ணுவதற்கு இந்த ட்ப்ஸும் ஒரு காரணம். இது நாம் எல்லோருக்கும் தெரிந்த டிப்ஸாக இருக்கலாம். இருப்பினும் தொடர்ந்து இதை நாம் யாரும் கடைபிடிப்பது கிடையாது. குண்டாக இருப்பவர்களுக்கு தொப்பை இருந்தால் அதன் மூலம் பிரச்சனை இல்லை. தொப்பையும் உடலும் சரிசமமாக தெரியும். இதற்காக தொப்பையை சரி என்று சொல்ல வரவில்லை. குண்டாக இருப்பவர்களுக்கு அதிகப்படியாக வெளியே தொப்பை தெரியாது.
குறிப்பாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு தொப்பை இருந்தால், அது அவர்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை கொடுக்கும். இந்த தொப்பை மட்டும் தனியாக வெளியே தெரியும். நீங்கள் குண்டாக இருந்தாலும் சரி ஒல்லியாக இருந்தாலும் சரி, சுலபமான மிக மிக சுலபமான முறையில் தொப்பையை எப்படி குறைப்பது பாக்கலாம் வாங்க!
முதலில் தொப்பை உள்ளவர்கள் டயட் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக சாப்பாட்டை குறைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சரியான அளவில், விரைவாக ஜீரணமாகும், எண்ணெய் குறைவான உணவினை சாப்பிட வேண்டும். சாப்பாட்டை, அதாவது சாதத்தை குறைத்துக் கொண்டு, காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்போது தான் நம்முடைய உடல் சோர்வடையாது. குறிப்பாக இரவில் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டை உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு விடவேண்டும். இரவு தூங்கப் போவதற்கு முன்பாக இத மட்டும் ஒரு டம்ளர் குடிச்சுட்டு வாங்க! தொடர்ந்து 7 நாட்கள் குடித்தால் தொப்பையில் வித்தியாசத்தை காண முடியும்.
ஒரு டம்ளர் அளவு தண்ணீரில், 1 டேபிள் ஸ்பூன் அளவு சீரகத்தைப் போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, இந்தத் தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்தால் போதும். இதை எப்போது குடிக்க வேண்டும்? கட்டாயம் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக 1/2 மணி நேரத்திற்கு முன்பு குடிக்கவேண்டும். இந்த தண்ணீரை குடிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டு இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது எல்லோருக்கும் தெரிந்த குறிப்பு தான். ஆனால் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடித்து பார்த்துவிட்டு அதை அப்படியே விட்டுவிடுவார்கள். முறைப்படி இரவு நேரத்தில், மேற்சொன்ன விஷயங்களோடு சேர்த்து, இந்த ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்கும் போது உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இரவில் மட்டும் இந்த தண்ணீரை குடிக்காமல், சாதாரணமாக குடிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக சீரகம் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்தால் உடல்நலத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாது. ஏனென்றால் இந்த சீரகத்தை, அகத்தை சீர்படுத்தும் சீரகம் என்றும் சொல்லுவார்கள். அதாவது வயிற்றில் உள்ள கெட்டதை சுத்தப் படுத்தக் கூடிய சக்தி இந்த சீரகத்திற்கு அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.