என்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா? படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே!
தூக்கமின்மை என்பது இன்று பெரும்பாலும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. தூக்கமின்மைக்கு முதல் காரணம் நீங்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் தான் என்றால் அது மிகையாகாது. இன்று செல்போனால் நிறைய பேருக்கு தூக்கம் என்பது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் நாள் முழுவதும் உற்சாகம் இழந்து, செய்யும் செயலில் முழுமையான ஈடுபாட்டை காண்பிக்க முடியாமல் போய் விடுகிறது. படுத்த உடனேயே சிலருக்கு எல்லாம் தூக்கம் எப்படி தான் வருகிறது என்று நாம் பலமுறை பொறாமை பட்டு இருப்போம். அது போல் நாமும் படுத்தவுடனே எப்படி தூங்குவது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு முதலில் நம்முடைய உடல் அதற்கு கட்டுப்பட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு முறை மாற்றத்தினால் கூட நிறைய பேருக்கு படுத்தவுடன் தூக்கம் என்பது வருவதில்லை. என்ன தான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் மட்டும் வந்தபாடில்லை என்று புலம்புபவர்கள் தினமும் இரவு தூங்கப் போகும் முன் இதனை ஒரு டம்ளர் அளவிற்கு குடித்து விட்டு தூங்கி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டம்ளர் அளவிற்கு கொதிக்கும் தண்ணீரில், ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொள்ளுங்கள். 5 நிமிடம் வரை சீரகத் தண்ணீர் கொதித்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீர் ஆறியதும் மிதமான சூட்டில் இரவு தூங்கும் முன் குடித்துவிட்டு தூங்க வேண்டும். வெறும் ஜீரக தண்ணீரை குடித்தால் மட்டும் போதாது, அதனுடன் சேர்த்து ஒரே ஒரு வாழை பழத்தையும் சாப்பிடுங்கள். அதன் பிறகு தூங்கச் சென்றால் படுத்த உடனேயே உங்களுக்கு ஆழமான, அற்புதமான தூக்கம் வருவதை நீங்களே உணரலாம். இதைச் சொல்லும் பொழுது உங்களால் நம்ப முடியாவிட்டாலும், நீங்கள் செய்து பார்க்கும் பொழுது உங்களுக்கே இதனுடைய அற்புதம் புரிய ஆரம்பிக்கும்.
தூக்கம் என்பது மனிதனுக்கு கிடைத்த வரம் அதனை தவற விட்டு விட்டால், வாழ்க்கையில் ஜெயிப்பது என்பது முடியாத காரியம் ஆகிவிடும். நல்ல தூக்கம் தான் சிறந்த மனிதனாக நாளை உங்களை உலகதிற்கு அடையாளப்படுத்திக் காண்பிக்கும். அல்ப சுகத்திற்காக தூக்கத்தை இழந்து உங்கள் உடலையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை விட உங்களுக்கு எதுவுமே முக்கியமில்லை என்கிற மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
ஜீரகம் பிடிக்காதவர்கள் பாலில் கசகசாவை மைய அரைத்து நன்கு கலந்து வெதுவெதுப்பாக குடித்துவிட்டு தூங்கி பாருங்கள் பிரமாதமான தூக்கம் வரும். நீங்கள் என்னதான் தூங்காமல் செல்போனை நோண்டிக் கொண்டு இருந்தாலும் ஆழ்ந்த தூக்கம் உங்களை அழைத்துச் செல்லும். தூங்குவதற்கு பயன்படுத்தும் தலகாணியை தேர்ந்தெடுப்பதிலும் தூக்கமின்மை பிரச்சினைக்கு விடை காண முடியும். நீங்கள் தலைக்கு வைத்துத் தூங்கும் தலைகாணி கல் போல் இல்லாமல், பஞ்சு போல் மிருதுவான தலையணையை வாங்கி தூங்கி பாருங்கள்.
அப்படி இல்லை என்றால் மருதாணி செடியுடைய பூக்களை பறித்து அதை தலைகாணி உறை மேல் பக்கத்தில் நிரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது தலையை வைத்து தூங்கும் பொழுது அற்புதமான தூக்கம் தானாகவே வந்துவிடும். மருதாணி பூவினுடைய வாசம் உங்களை தூக்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும். மூளை செல்களை தூண்டி விடக் கூடிய சக்தி அதன் வாசனைக்கு உண்டு. மூளை செல்களை அயர்வுற செய்து உங்களை ஆழமான தூக்கத்திற்கு கொண்டு செல்லும். இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவீர்கள்.